மேலும் அறிய

மதுரையில் கிரந்த எழுத்துகளுடன்  கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் கிடைத்தது !

கருவேலம்பட்டி அருகே சுமார் 500 ஆண்டு பழமையான கிரந்த எழுத்துகளுடன்  கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழரின் பெருமை சொல்லும் கீழடியில்-7ம் கட்ட அகழாய்வுப் பணியின் கடைசி கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.   சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிப்பு செய்தது, தொல்லியலை பாதுகாக்க பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவரும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் சிவகங்கை தொல்நடைகுழு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது பெரும் வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் மதுரையில் 500 ஆண்டு பழமையான கிரந்த எழுத்துகளுடன்  கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கிரந்த எழுத்துகளுடன்  கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் கிடைத்தது !
மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் கருவேலம்பட்டி பகுதியில் சூரிய பிரகாஷ் கொடுத்த தகவலின்படி   மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லெட்சுமண மூர்த்தி,  அஸ்வத்தாமன்,  சுப்பிரமணியன்,  ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு மேற்பரப்பு கள ஆய்வு செய்த போது தனியார் விவசாய நிலத்தில் தனி பாறையில் கிரந்தம் கல்வெட்டும் புடைப்பு சிற்பமும் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும் .

மதுரையில் கிரந்த எழுத்துகளுடன்  கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் கிடைத்தது !
இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியாதவது ...,” கருவேலம்பட்டி இருந்து மொச்சிக்குளம் செல்லும் சாலை அருகே தனியார் விவசாய நிலத்தில் தனி பாறையில் 2 அடி அகலம்,  4 அடி நீளம் கொண்ட 4 வரிகளில் கிரந்தம் எழுத்துகளுடன் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்த போது கோபாலகிருஷ்ணன் மகன் என்ற வரியில் தொடங்கி நான்காவது வரியில் தம்மம் என்ற சொல்லில் முடிவு பெறுகிறது.  இடையில் வெட்டப்பட்ட கல்வெட்டு காலப்போக்கில்  மழை, வெயில் போன்றவாற்றால் தேய்மான ஏற்பட்டு சிதைந்து விட்டதால் தொடச்சியான பொருளை அறிய முடியவில்லை.
 

மதுரையில் கிரந்த எழுத்துகளுடன்  கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் கிடைத்தது !
சிற்பம்
 
இக்கல்வெட்டின் இடது புறம்  இருக்கின்ற பாறையில் 2 அடி அகலம்,  3 அடி நீளம் கொண்ட புடைப்பு சிற்பமாக சொதுக்கப்பட்டுள்ளது.இச்சிற்பம் நீண்ட காதுகளுடன்,  கழுத்தில் அணிகலன் அணிந்து கொண்டு ஆணின் சிற்பமும்,  சரிந்த கொண்டையுடன்,  நீண்ட காதும் கையில் வளையல் அணிந்து கொண்டு சற்று சாய்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இச்சிற்பம் அப்பகுதியில் வாழ்ந்த தலைவன் தலைவிக்காக உருவாக்கப்பட்டு இருக்கலாம். இச்சிற்பம் அதிகமான தேய்மானம் ஏற்பட்டதால் முகம் தெளிவற்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு மற்றும் சிற்பத்தினை தமிழ்நாடு தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற இனை இயக்குனர் முனைவர் சொ.சாந்தலிங்கம் ஐயா அவர்களுடன் உதவியுடன் ஆய்வு செய்த போது கி.பி.பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்தவை என அறியப்பட்டது. தற்போது மக்கள் நீலன்,  நீலி என்று பெயரில் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர் என்றார்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget