மேலும் அறிய
திருப்பரங்குன்றம் தீபம், கோயில், சொக்கப்பன்... மூன்றும் ஒரே நேர்கோட்டில் - இதை கவனுச்சீங்களா?
உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறை மற்றும் சைவ நெறிமுறைகளின்படி சரியானது எனத் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்
Source : whatsapp
திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதற்கு கோயில் நிர்வாகம் ஸ்தானிக பட்டர் கருத்தின்படி ஏற்றப்பட்டதாக அறிக்கை வெளியிட்டது - இது தொடர்பாக 2013 மற்றும் 2025 ஆண்டுகள் மட்டுமே கருத்து தெரிவித்ததாக ஸ்தானிக பட்டர்கள் கடிதம்.
திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு ஸ்தானிக பட்டர்கள் சார்பில் கடிதம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு ஸ்தானிக பட்டர்கள் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருநாள் தொடர்பாக கோயில் நிர்வாகம் கேட்ட விளக்கத்திற்குப் பதிலாக இக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 1996-ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாக ஒத்துழைப்புடனும், சைவ சமய வழிபாட்டு நெறிமுறைகளின்படியும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வருவதாக ஸ்தானிக பட்டர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரே நேர்கோட்டில்
மேலும், உச்சிப் பிள்ளையார் கோயில், ராஜகோபுரம் மற்றும் சொக்கப்பன் ஏற்றும் இடம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் உள்ளதையும், இதற்கு முன்பு 2013 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளிலும் இதுபோன்ற கருத்துரை எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறை மற்றும் சைவ நெறிமுறைகளின்படி சரியானது எனத் தெரிவித்துள்ளனர்.
ஸ்தானிக பட்டர்கள் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரே நேர்கோட்டில் உச்சிபிள்ளையார் கோயில் தீபம், கோயில், சொக்கப்பனை ஏற்றும் இடம் ஒரே நேர் கோட்டில் அமைந்தது சிறப்பான ஒன்று. எனவே இந்த நடைமுறை தான் வழக்கமாக செய்யப்படுகிறது. இதையே தொடர்வது சிறப்பான ஒன்று என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















