மேலும் அறிய
Advertisement
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிப்பு - வெளியுறவு இணை அமைச்சர்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிப்பு - மதுரை எம்.பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் பதில் அளித்துள்ளதாக எம்.பி வெங்கடேசன் தகவல்.
நாடாளுமன்றத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது பற்றி மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளாதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தகவல் வெளியிட்டுள்ளார். அமைச்சர் பதில் அளித்துள்ளதாக தெரிவித்த தகவலில், “தமிழக மீனவர்கள் 2019 இல் 190 பேர், 2020 இல் 74 பேர், 2021 இல் 143 பேர், 2022 இல் 219 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட படகுகள் 2019 இல் 39, 2020 இல் 11, 2021 இல் 19, 2022 இல் 30 என்றும் அவற்றில் மீண்டும் திரும்ப மீட்கப்பட்ட படகுகள் 2019 இல் 1, 2020 இல் 1, 2021 இல் 4, 2022 இல் 0 " என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் அரசு முறை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தாக வெளியிட்ட தகவலில்
இந்திய தூதரகம் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் நலன், சட்ட உதவி செய்து வருவதாகவும், இப்பிரச்னை குறித்து பிரதமர்கள் மட்டத்தில் இணைய வழியில் செப்டம்பர் 2020, இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இலங்கை மீன் வள அமைச்சர் மட்டத்தில் ஜூன் 2021, மார்ச் 2022 லிலும், இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இலங்கை நிதி அமைச்சர் மட்டத்தில் இணைய வழியில் ஜனவரி 2022 லிழும் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும், 2016 இல் 2 + 2 (இரண்டு நாடுகளின் வெளியுறவு, மீன் வள அமைச்சர்கள்) சந்திப்பில் உருவாக்கப்பட்ட கூட்டு செயல் குழு மார்ச் 2022 இல் ஐந்தாவது முறையாக கூடி விரிவாக விவாதித்துள்ளது என்றும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்.பி சு. வெங்கடேசன் கருத்து
"அரசு முயற்சிகளை எடுப்பதாக கூறினாலும் இலங்கை கடற்படையின் அத்து மீறல்களும், கைதுகளும் அதிகரித்து வருவதையே அமைச்சரின் பதிலில் உள்ள விவரங்கள் சொல்கின்றன. 2019 இல் 190 கைதுகள் என்பது கோவிட் காலத்தில் மட்டும் சற்று குறைந்தாலும் 2022 இல் இதுவரை 219 என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் 93 படகுகள் மீட்கப்படவில்லை. ஆகவே அரசு முறை முயற்சிகள் இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும். இன்னும் சிறையில் இருக்கிற 21 பேர் தமிழக மீனவர்கள் உடன் விடுதலை செய்யப்பட நடவடிக்கைகள் வேண்டும்." என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion