மேகமலையில் மின் உற்பத்தி : மலை கிராமங்களுக்கான மின்வாரியத்தின் திட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுற்றுலா தலங்களாக கருத்தப்படும் மலைகிராமங்களுக்கு மின் உற்பத்தி செய்ய மேகமலை மின் வாரியம் திட்டமிட்டுள்ளது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுற்றுலாத் தலமாக கருதப்படும் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு ,இரவங்கலாறு ஆகிய 7 மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்காக வசித்து வருகின்றனர். இங்கு 900 குடியிருப்புக்கு தேவையான மின் வசதிகள் மற்றும் தேயிலை எஸ்டேட் தேவையான உயரழுத்த மின் இணைப்புகளும் உள்ளன .
இந்த மலை கிராமங்களில் தேவையான மின்சாரம் வண்ணாத்தி பாறை துணை மின் நிலையத்தில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி வீசும் காற்று மற்றும் மலையின் இயற்கை சீற்றத்தால் மின் வயர்கள் அருந்தும் மின்சப்ளை அடிக்கடி துண்டிக்கப்பட்டு கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது இந்த வனப்பகுதி முழுவதும் 7 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அடர்ந்த காடுகளாகும் யானை ,சிறுத்தை போன்ற வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதியில் கடுமையான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 6 நாட்களுக்கு மேலாக மின் இணைப்பு இல்லாமல் கிராமம் முழுவதும் இருளில் மூழ்கியது.
இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேகமலை கிராமங்களுக்கு தேவையான மின்சாரத்திற்கும் மேகமலை பகுதியிலுள்ள இடத்தில் மின் உற்பத்தி செய்ய மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் அனுமதி பெற்று அதற்கான முதற்கட்ட ஆய்வு பணி துவங்கிய பின்னர் 7 மலை கிராமங்களுக்கு தேவையான மின்சாரம் தேவையை பூர்த்தி செய்ய அங்கேயே மின் உற்பத்தி நிலையம் அமைத்து மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.