மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில், திட்டங்கள் பாதிப்படையும் - ஓ.பி.எஸ்
ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில் மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது. இருதரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும். -ஓபிஎஸ் பேட்டி
![ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில், திட்டங்கள் பாதிப்படையும் - ஓ.பி.எஸ் In the legal battle between the Governor and the Tamil Nadu government, the projects reaching the people will be affected - OPS, interview ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில், திட்டங்கள் பாதிப்படையும் - ஓ.பி.எஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/22/8d9c55ad4c5b3fd1bbb232384391509f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஓ.பன்னீர்செல்வம்
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு
காவிரி ஆற்று படுகை ஒரு பன்மாநில ஆறாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு ஆறு இரண்டு, மூன்று மாநிலங்கள் வழியாக ஓடுகின்ற போது, அந்த மூன்று மாநிலங்களுக்கும் உரிமை இருக்கிறது என்றுதான் சொல்கிறது. அதன்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு அதற்கான அரசாணை பெற்று தந்தவர் ஜெயலலிதா. அந்த தீர்ப்பின்படிதான் காவிரி நதிநீர் ஆணையம், காவேரி நதிநீர் ஒழுங்கு முறை தற்போது காவிரி ஒழுங்காற்று குழுமம் என்கிற பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக காவிரி நதியின் நீரை எவ்வாறு பங்கிடுவது, வறட்சி ஏற்பட்டால் அதை எப்படி பங்கிடுவது என்பதெல்லாம் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு அரசு மீறுவது என்பது இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாகத்தான் அர்த்தம். அவர்கள் எந்த வித உயர்ந்த பதவியில் இருந்தாலும் இந்திய அரசியல் சட்டத்தை யாரும் மீறக் கூடாது என்பதுதான் நம்முடைய சட்டம். அந்த சட்டத்தை மீறுபவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக தான் அர்த்தம். இதில் தமிழ்நாடு அரசு உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை.
![ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில், திட்டங்கள் பாதிப்படையும் - ஓ.பி.எஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/15/cdd9f993da7f23ac2090a3ca4b6eed39_original.jpg)
தமிழக மீனவர்கள் கைது குறித்த கேள்விக்கு
தொடர்கதையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் செல்வது வேடிக்கையாக இருக்கிறது, வாடிக்கையாக இருக்கிறது. இதனால் தமிழகத்தின் மீனவர்கள் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண தமிழக முதல்வர் மற்றும் பாரத பிரதமரும் இலங்கை அரசை தொடர்பு கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
![ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில், திட்டங்கள் பாதிப்படையும் - ஓ.பி.எஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/e5a1d7738b073f678d6398b45dcb9254_original.jpg)
ஆளுநர் மீது தமிழக அரசு வழக்கு தடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு
ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டம் இதில் மக்களுடைய திட்டங்கள், மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது. இருதரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.
![ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில், திட்டங்கள் பாதிப்படையும் - ஓ.பி.எஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/20ff09f8d93c1b83d424760486a93a70_original.jpg)
புதிய கட்சி தொடங்குவதற்காக தேவரிடம் வேண்டிக் கொண்டீர்களா என்ற கேள்விக்கு
கனவு காண்பதற்கு நீங்கள் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்வது.
பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியது குறித்த கேள்விக்கு
நேற்று முன்தினமே நான் சமூக வலைதளங்கள் மூலமாக பசும்பொன் என்கிற புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவித தொந்தரவு துயரத்தை கொடுக்கக் கூடாது என்பதை தெரிவித்து இருக்கிறேன். இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
*பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றோர் விடுதலை மற்றும் நீட் தேர்வு ரத்துக்காக பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் கூறியது குறித்த கேள்விக்கு:*
அது தீர்வாகாது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு கவர்னர் மாளிகை மீது குண்டு வீசுவது தீர்வாகாது அது மிகவும் கண்டனத்திற்குரியது என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion