மேலும் அறிய
Advertisement
முதுமக்கள் தாழி ; இரும்பு பொருளின் எச்சம்.. அகழாய்வால் சிவகங்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சி..
நாட்டரசன்கோட்டையை அடுத்த முத்தூர் வாணியங்குடியில் முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருளின் எச்சம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அமைந்திருப்பது மிகப்பெரும் பெருமையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுதும் தொடர்ந்து பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவருகிறது. நினைவுத்தூண்கள், மடைக் கல்வெட்டுகள், பழமையான கோயில், பழங்கால நாணயங்கள் என கிடைத்து வருகின்றன. தற்போது முத்தூர் வாணியங்குடியில் முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருளின் எச்சம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா, “இறந்தவர்களை நல்லடக்கம் செய்வது மனித குலத்தின் மாண்பாக இன்றும் இருந்து வருகிறது. ஆதிமனிதர்களிடத்திலும், இறந்தவர்களை பாதுகாப்பாக அடக்கம் செய்யும் முறை இருந்து வந்துள்ளது. அவர்களிடத்தில் உடலை அழியாமல் பாதுகாத்தால் மறுமை வாழ்வுக்கு அது உதவும் என்ற நம்பிக்கையும் இருந்துள்ளது.
விலங்குகளிடமிருந்து இறந்த மனித உடலை பாதுகாக்கும் வண்ணம் 3500 ஆண்டுகளுக்கு முன்னாள் பெருங்கற்களை அடுக்கி கல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அக்காலம் வரலாற்றில் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது. இவை பல்வேறு இடங்களிலும் ஒரே மாதிரியாக காணப்படுவது வியப்புக்குரியது. கல்வட்டங்களு க்கு உள்ளேயும் தாழிகள் காணப்படுவது உண்டு.
முதுமக்கள் தாழிகள்.
இறந்தவர்களின் உடலை பெரிய பானை (நெற்குதிர்) போன்ற தாழியில் வைத்தோ அல்லது இறப்புக்கு பிறகான எலும்புகளை பாதுகாப்பாக வைக்கவோ இம்மாதிரியான முறைகளை 2000 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றியிருக்கலாம். மேலும் மறுமை வாழ்வு எண்ணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான பொருள்களையும் உள் வைக்கும் முறை இருந்துள்ளது.
சென்னலக்குடி கசிவு நீர் குட்டை புறகரையில் முதுமக்கள் தாழிகள்
பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மண்ணுக்குள் புதையுண்டு மேற்பகுதி உடைந்து ஓடுகளாக காணப்படுகின்றன. நிலத்தின் மேற்பரப்பில் ஒரு சிதைவுண்ட தாழியில் ஓடுகளோடு இரும்புப் பொருளின் எச்ச துணுக்குகளும் காணப்படுகின்றன. முத்தூர் வாணியங்குடி சென்னலக்குடி கசிவு நீர் குட்டைப் பகுதியிலிருந்து கௌரிப்பட்டி விலக்கு சாலையின் இருபுறங்களிலும் முதுமக்கள் தாழியின் ஓட்டு எச்சங்களை காணமுடிகிறது.
கல்வட்டம் இருந்த சான்று.
கசிவுநீர் குட்டையான இவ்விடமானது நெடுங்காலமாக ஈமக்காடாக இருந்திருக்கலாம் மூன்று பெரிய கற்கள் கல்வட்டத்தின் எச்சமாக இன்றும் காணக் கிடைக்கிறது. மிகவும் சிதைவுற்று இருக்கக்கூடிய இந்த முதுமக்கள் தாழிகள் ஓரிடத்தில் குவியலாக காணப்படுவது மிகுந்த சிறப்புக்குரியது. மேலும் அவ்விடத்தில் இரும்பு பொருட்களின் எச்சம் கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓட்டுக் கிடையே நில மேற்பரப்பில் கிடைத்த இரும்பு பொருளின் எச்ச துணுக்குகளை சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஓரிரு நாளில் ஒப்படைக்க உள்ளோம்.
நாட்டரசன்கோட்டையை அடுத்த முத்தூர் வாணியங்குடியிலிருந்து கௌரிபட்டி விலக்கு சாலையின் வடக்குப் பகுதியில் உள்ள சென்னலக்குடி கசிவு நீர் குட்டையின் புறகரையில் மண் ஓடுகள் நிறைந்திருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு சரவணன் தகவல் தெரிவித்தார். சிவகங்கை தொல் நடைக் குழு தலைவர் நா.சுந்தரராஜன், உறுப்பினரும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவி இலக்கிய வடிவு ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தோம்” என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion