பழனி: மனசு திருட்டு.. கல்யாணத்துக்கு ஆயுள் தண்டனை! இப்படியும் ஒரு கல்யாண பேனர்!
பழனி அருகே திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தினசரி நாளிதழ் போன்று வித்தியாசமான முறையில் ப்ளக்ஸ் பேனர் வைத்த நண்பர்கள்..
தற்போது இருக்கும் விளம்பர உலகில் தன்னை தானே விளம்பரப்படுத்துவதற்கும் தங்களின் நிகழ்வுகள் , நிகழ்ச்சிகள் குறிப்பாக தன்னை வெளிப்படுத்த சுயவிளம்பரங்கள் செய்பவர்களின் செயல்கள் அவ்வப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். விளம்பரத்திற்காக வித்தியாசமான முறையில் ப்ளக்ஸ் பேனர்கள் வைப்பது, அழைப்பிதழ்கள் வித்யாசமான முறையில் தயாரிப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுவர் அப்படி தனது நண்பரின் திருமணத்திற்கு தினசரி பத்திரிக்கை நாளிதழ் போல் சித்தரித்து வித்யாசமான முறையில் பழனியை சேர்ந்த இளைஞர்கள் ப்ளக்ஸ் பேனர் வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம், இவர் சென்னையைச் சேர்ந்த வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களது திருமணம் பழனியில் நடைபெற்றது. திருமணத்திற்கு கௌவுதமின் நண்பர்கள் நாளிதழ் போன்று வித்தியாசமான முறையில் பிளக்ஸ் பேனரை வடிவமைத்து வைத்தனர். நாளிதழில் வரும் தலைப்புச் செய்தி, விளையாட்டு செய்தி போன்ற வாசகங்களுடன், மணமகன், மணமகள் மற்றும் நண்பர்கள் படங்களை குற்றவாளிகள் போன்றும் வடிவமைத்து நண்பர்கள் வைத்திருந்த பேனர் திருமணத்திற்கு வந்த உறவினர்களை கவர்ந்தது.
IND vs PAK: 36 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ரோகித்... என்ன சாதனை தெரியுமா?
திருமண தம்பதிகளை வாழ்த்துவதாக மணமகள் பெயரை வைத்து வினித்தாவின் மனதை திருடிய குற்றத்திற்காக மாப்பிள்ளைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது எனவும், திருமண தம்பதிகளை வாழ்த்தும் விதமாக நண்பர்கள் புகைப்படத்தின் மேல் கல்யாண பந்தலில் கலவரம் , பலகாரத்தில் முடிந்த பரிதாபங்கள் என்ற வாசகங்கள் அடங்கி இருந்தது. அதேபோல் வாழ்த்துபவர்களின் சிலர் புகைப்படத்திற்கு மேல் கல்யாண மாலை தேவை என திருமணத்திற்கு பெண் தேவை என்பது போல் வித்யாசமான முறையில் திருமண தம்பதிகளை வாழ்த்தும் விதமாக ப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தது அங்கு வந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்