மதுரை தெப்பக்குளத்தில் பரதநாட்டியம் ஆடி வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம்!
நடிகை காயத்ரி ரகுராம் பரதநாட்டியம் ஆடியும், உணவு விடுதிகளில் குலோப்ஜாம், காளான் ஆகியவற்றை பொதுமக்களுக்கு செய்து கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
![மதுரை தெப்பக்குளத்தில் பரதநாட்டியம் ஆடி வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம்! In Madurai Theppakulam, actress Gayathri Raghuram danced Bharatanatyam and collected votes in a modern way மதுரை தெப்பக்குளத்தில் பரதநாட்டியம் ஆடி வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/32c0816b20ba2b60714caacf5cbd5c801712372763771333_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
”நான் உங்களுக்கு குலோப்ஜாம் கொடுத்து இருக்கேன் நீங்க உங்க ஓட்ட எனக்காக இரட்டை இலைக்கு கொடுக்கணும்" என உரையாடி வாக்குகளை சேகரித்தார்.
தேர்தல் திருவிழா 2024
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனும், அ.தி.மு.க., சார்பில் டாக்டர் டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர். பிற வேட்பாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் இருவரும் வெற்றியை நோக்கி தேர்தல் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடிகை காயத்ரி ரகுராம் பரதநாட்டியம் ஆடியும், உணவு விடுதிகளில் குலோப்ஜாம், காளான் ஆகியவற்றை பொதுமக்களுக்கு செய்து கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
நடிகை காயத்ரி ரகுராம்
மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வரும் தெப்பக்குளத்தில் தினமும் காலை மாலை என இரு வேளையிலும் நடைபயிற்சியும் செய்வார்கள். சில வருடங்களாக தெப்பக்குளம் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்த பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து வருகிறது. தெப்பக்குளத்தில் 200க்கும் மேற்பட்ட மாலை நேர உணவு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தெப்பக்குளத்தில் நடை பயிற்சி செய்த பெண்கள், முதியவர்களிடம் உரையாடி துண்டு பிரச்சாரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.
நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
மேலும் பரதநாட்டியம் ஆடியும், தெப்பக்குளத்தில் செயல்படும் மாலை நேர உணவு விடுதிகளில் குலோப்ஜாம் செய்து கொடுத்தும், சோயா காளான் ஆகியவற்றை செய்து மக்களுக்கு வழங்கியும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
"நான் உங்களுக்கு குலோப்ஜாம் கொடுத்து இருக்கேன் நீங்க உங்க ஓட்ட எனக்காக இரட்டை இலைக்கு கொடுக்கணும்" என உரையாடி வாக்குகளை சேகரித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha 2024: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை- தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - IPL 2024 CSK: கெத்து காட்டும் சென்னை அணிக்கு ஷாக்! பாதியில் செல்லும் வேகப்புயல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)