மேலும் அறிய
Advertisement
Tamil News: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை... பெண்கள் வடம்பிடித்த தேர் - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1186 இருக்கிறது.
1. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து வெளிப்படையாக போட்டியை நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
2. மார்கழி மாதத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தை குறிக்கும் நிகழ்ச்சியாக கருதப்படும் மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
3. மதுரையில் நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நெல் மூட்டைகளுக்கான பணம் செலுத்துவதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் உரிய விசாரணை நடத்த விவசாயிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. லாஜிஸ்டிக்ஸ் பயிற்சி மூலம் ஆண்டுதோறும் தூத்துக்குடியைச் சேர்ந்த 400 இளைஞர்கள் பயனடைய திட்டமிடப்பட்டுள்ளது.
5. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1.11.21 அன்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலின்படி 1,370 பாகங்களில் 5 லட்சத்து 77ஆயிரத்து 750 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 84 ஆயிரத்து 47 பெண் வாக்காளர்கள், 62 மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் என மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 859 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
6. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தில் பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தார். இது குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
7. சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில், 2018 மே 28-ல் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த, ஆறுமுகம், சண்முகநாதன். சந்திரசேகர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணையை 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தடவிட்டனர்.
8. நெல்லை சந்திப்பு கருப்பந்துறையை சேர்ந்தவர் பீர்முகம்மது, இவர் நெல்லையை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும்போது பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ள கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் பீர் முகம்மதுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை போக்சோ நீதிபதி அன்பு செல்வி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட கூலிதொழிலாளி பீர்முகம்மதுக்கு 16 மாத சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
9. மதுரை உட்பட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பயிற்சிகள் வேகமெடுத்து வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாட்டு மாடுகள் மட்டும் தான் அனுமதி என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 6 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75668-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion