மேலும் அறிய
Advertisement
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு- செயல்பாபு அல்ல; ஸ்நேக் பாபு - ஹெச்.ராஜா கிண்டல்
’’இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது போல தி.மு.க ஆட்சியில் அழிக்கப்பட்ட கோயில்கள் அதிகம்’’
மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள பி.ஜே.பி அலுவலகத்தில் நடைபெற்ற தீனதயாள் உபத்யாயா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர்கள் தங்கள் இலாகாக்களை பற்றி கவலைப்படாமல் செயலாற்றி வருகின்றனர், அமைச்சர் சேகர் பாபு செயல்பாபு என முதல்வர் கூறுகிறார். ஆனால் சேகர் பாபு அல்ல; ஒரு ஸ்நேக் பாபு. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு செல்லாமல் வளைகாப்புக்கு செல்கிறார்.
இன்றைய தினம் இந்த நாட்டிற்கு உகந்த மூன்றாவது பொருளாதார சிந்தனை "ஏகாத்ம மானவ தர்ஷன்" அருளிச்செய்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த தினத்தன்று அவர் வழி நடக்க உறுதியேற்போம்.#DeenDayalUpadhyay #DeenDayalUpadhyaya@blsanthosh @CTRavi_BJP pic.twitter.com/pWAB9IdTir
— H Raja (@HRajaBJP) September 25, 2021
மானியகோரிக்கையின் போது அமைச்சர்களின் அறிவிப்புகள் அனைத்தும் அதிகாரத்தை மீறிய அறிவிப்புகள் தான். ஒரு அரசு மதசார்பற்ற அரசாக இருக்கலாம். ஆனால் இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபட கூடாது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என ஏற்கனவே அறிவிப்பு உள்ள நிலையில் வம்பு செய்கின்ற அறிவிப்பை தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது,
இந்து சமய நிலையத்துறை தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகளை நிறைவேற்றாமல் அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் பின்னால் செல்கிறார். இந்து சமய அறநிலையத்துறையை அறநிலையத்துறை என மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தில் கல்லூரி தொடங்கினால் இந்து சமய மத பாடம் கட்டாயம் இருக்க வேண்டும், தமிழ்நாடு காவல்துறை இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. கோவில் நகைகள் விற்கப்படுவது இந்து சொத்துக்களை கொள்ளையடிக்ககூடிய செயல், இந்து கோயில்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது. அறநிலையத்துறை எதற்கு செயல்படுகிறது என்பது தெரியவில்லை.
இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது போல தி.மு.க ஆட்சியில் அழிக்கப்பட்ட கோயில்கள் அதிகம். 1967 வரை பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே மாதிரியாக தேர்தல் நடைபெற்றது இதுவே பி.ஜே.பியின் நிலைப்பாடு. ஒரே நாடு ஒரே தேர்தல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசி எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion