மேலும் அறிய

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - உத்தரவிட்ட நீதிபதி

ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தீவிர விசுவாசியாகவும் இருந்தவர்தான் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் சட்டமன்ற வேட்பாளராக களம் இறக்கப்பட்டு ஜெயலலிதா அவர்களின் நேரடிப்பார்வையில் பல முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்  ஓ.பன்னீர்செல்வம்.

Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. மீண்டும் உருவாகிறது ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - உத்தரவிட்ட நீதிபதி

மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழகத்தின் நிதியமைச்சராகவும் இருந்து வந்தார். அதே நேரத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்ற தண்டனை பெற்று சிறை தண்டனைக்கு சென்ற போது தமிழகத்தில் இரண்டு முறை தற்காலிக முதல்வராகவும் இருந்தவர்தான் ஓ.பன்னீர் செல்வம்.இந்த நிலையில் 2001 முதல் 2006 வரை வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ஓ.ராஜா, மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் மீது 2006-ஆம் ஆண்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - உத்தரவிட்ட நீதிபதி

ஆனால், அடுத்த அதிமுக ஆட்சி காலத்தில் 2012-ஆம் ஆண்டு, ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட சிவகங்கை நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதித்த சிவகங்கை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.

Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - உத்தரவிட்ட நீதிபதி

எம்பி, எல்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, நாள்தோறும் விசாரணை நடத்தி, அடுத்த ஆண்டு ஜூன் 31-ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் ஆணையிட்டுள்ளார்.  மேலும், வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால், சம்பந்தப்பட்டவர்களின் பிணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
Embed widget