மேலும் அறிய

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தென் மண்டல காவல்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு

காவல்துறை துணை தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு.

நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்த காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்த அறிக்கையை தென் மண்ட காவல்துறை தலைவர் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், “2018ஆம் ஆண்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தேன். அப்போது அரசு தரப்பில் என் மீது பதியப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரணை செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பின் என் மீது பதியப்பட்ட வழக்கின் இறுதி அறிக்கை நகலை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் கேட்கும்போது நீதிமன்றத்தில் தற்போது வரை இறுதி அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தனர். எனவே, நீதிமன்றத்தில் தவறுதலாக அறிக்கை அளித்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு முந்தைய விசாரணையில், நீதிமன்றத்தில் காவல்துறையினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது நீதிமன்ற பணியாளர்கள் நேரம், தேதி, முத்திரை, கையெழுத்து உடன் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் இதனை மாவட்ட முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க மேலும் வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை தென் மண்டல காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர் பதில் மனு தாக்கல் செய்தார். ஒப்புகை சீட்டு வழங்க உத்தரவிட்டதன் பின்பு கடந்த 2 மாதத்தில் 2011 முதல் 2021 வரை 65000 வழக்குகளில் 25000 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புகை சீட்டு பெறப்பட்டுள்ளது.  38000  வழக்குகளில் தடவியல் துறை அறிக்கை, பிறதுறைகளில் இருந்து அறிக்கை பெறப்பட வேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முன்பை விட அதிகமான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி, தென் மண்டல காவல்துறை தலைவர், துணை காவல்துறை தலைவர் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்த அறிக்கையை தென் மண்ட காவல்துறை தலைவர் சமர்ப்பிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 


மற்றொரு வழக்கு

காவிரி ஆற்றில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
 
கரூரை சேர்ந்த சதீஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், "தனியார் கழிவறைகளின் கழிவுகளை  அருள்மிகு மடுகரை செல்லாண்டி அம்மன் திருக்கோயில் அருகே, காவிரி ஆற்றில் விடுவதாகவும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி  சந்திரசேகரன் அமர்வு, "இந்த வழக்கை பொறுத்தவரை காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கழிவறைகளை கட்ட உத்தரவிட வேண்டும் எனவும் இரண்டு கோரிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பில் இரண்டு மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே சமயம், இனிவரும் காலங்களிலும் காவிரி ஆற்றில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget