மேலும் அறிய
Advertisement
கணவனை கண்டுபிடித்து தரக்கோரிய ஆட்கொணர்வு மனு - மனைவிக்கு ஒரு லட்சம் அபராதம்
"கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனுதாரரின் கணவர் மறைந்து வாழ்கிறார். இதை மறைத்து, கடன் பிரச்சனையில் இருந்து தப்புவதற்காக அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்’’
கடனை திருப்பி செலுத்தாமல் தனது கணவர் மறைந்து இருப்பது தெரிந்தும் பொய்யான வழக்கு தொடர்ந்த மனைவிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சவுக்கியா தேவி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்," என் கணவர் ஜெயவேலன். வழக்கறிஞராக பணியாற்றினார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார். திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் என் கணவரை கடன் கொடுத்தவர் கடத்தி சட்டவிரோதமாக வைத்துள்ளனர். எனவே, எனது கனவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு,"கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனுதாரரின் கணவர் மறைந்து வாழ்கிறார். இதை மறைத்து, கடன் பிரச்சனையில் இருந்து தப்புவதற்காக அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. உண்மையை மறைத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை தென்காசி எஸ்பியிடம் செலுத்த வேண்டும். அவர், மனுதாரரின் கணவரை தேடுவதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினருக்கு மதிப்பூதியமாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி 5வது வார்டை பொது பிரிவு ஒதுக்க கோரிய வழக்கு - நகராட்சி நிர்வாக முதன்மை செயலர், நெல்லை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு
நெல்லை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த பத்மராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மாநகராட்சி 5வது வார்டில் ஆண்டாள் தெற்கு வீதி, காவலர் குடியிருப்பு, திம்மை தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் ரஹ்மத் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. சுமார் 8,822 வாக்காளர்கள் உள்ளனர். இதில், சுமார் 550 பேர் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த 5வது வார்டு கடந்த 25 ஆண்டுகளாக எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு பிரிவைச் சேர்ந்தவர்களால் போட்டியிட முடியாத நிலை உள்ளது. வார்டு மறு சீரமைப்பின்போது கூட வார்டு மாற்றப்படவில்லை. எனவே, மாநகராட்சி 5வது வார்டை எஸ்சி பிரிவில் இருந்து பொதுப்பிரிவிற்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் (தேர்தல்), நெல்லை மாநகராட்சி ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால் இந்த வழக்கு காலாவதி ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் (தேர்தல்), நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion