மேலும் அறிய

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த புள்ளிமான் கோம்பை நடுகற்கள்

தமிழர்கள் மொழியறிவு, எழுத்தறிவு பெற்றவர்கள் கல்வெட்டுகளில் எழுத்துகுறிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பதை புலிமான்கோம்பை கல்வெட்டுகள் நிருபித்துள்ளன.

செம்மொழியான தமிழ் மொழி என்று உலக அரங்கில் தமிழுக்கென தனி பெருமை உண்டு . தமிழுக்கென பல்வேறு வரலாறுகள் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது. செம்மொழியான தமிழ்மொழி என்று மொழிகளில் சிறந்த மொழியாக தமிழுக்கென ஒரு தனித்துவம் உண்டு. மொழிகளில் மூத்த மொழியாகவும் தமிழ் மொழி திகழ்கிறது. 

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த புள்ளிமான் கோம்பை நடுகற்கள்

இதனை அவ்வப்போது உறுதிப்படுத்தும் விதமாக மதுரை ,தேனி , திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மூத்தகுடி மக்கள் பயன்படுத்திய பண்டைய கால மக்களின் வாழ்வாதாரங்களை எடுத்துக்காட்டும் விதமாக கல்வெட்டுகள், பொருட்கள தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது நடுகல். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காணப்படும் பாறை ஓவியங்கள் ,கல்வெட்டுகள் படைப்புச் சிற்பங்கள் என தொல்லியல் அடையாளங்களை பறைசாற்றுவதாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாக ஆய்வாளர்கள் பார்ப்பது நடுகற்கள். 

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த புள்ளிமான் கோம்பை நடுகற்கள்

ஆண்டிபட்டியில் உள்ள புள்ளி மான்கோம்பை எனும் சிற்றூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவின. குறிப்பாக சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி எனும் பிராகிருத மொழி கலப்பின்றி எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களின் ஆதி வடிவமான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று நடுகற்களில் இருந்தன. தமிழ் மொழிக்கு எத்தனையோ பழமையான இலக்கியச் சான்றுகள் இருந்தாலும் அதனுடைய பழமையான எழுத்து வடிவங்கள் கிடைக்காமல் இருந்தன. அதனை பூர்த்தி செய்ய உதவியது  2006-இல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கிடைக்கப்பெற்ற  புள்ளிமான் கோம்பை கல்வெட்டுகள். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்த நடுகற்களின் தொன்மையை வைத்துதான் உலக அரங்கில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். மூன்று அடி உயரமும் ஒன்று முதல் ஒன்றரை அடி அகலமும் உள்ள இந்த நடுகற்கள், சங்க காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளில் மேல் செய்யப்படும் ஈமச் சின்னங்களின் ஒரு பகுதியாகும்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த புள்ளிமான் கோம்பை நடுகற்கள்

கி-மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகற்கள் தான் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்கற்களிலேயே  மிகவும் பழமையானது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் மிக பழமையானதாக அசோகரின் பிராமி கல்வெட்டு கருதப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு முன்பே தமிழர்கள் மொழியறிவு, எழுத்தறிவு பெற்றவர்கள் கல்வெட்டுகளில் எழுத்துகுறிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பதை புலிமான்கோம்பை கல்வெட்டுகள் நிரூபித்துள்ளது.

மேலும் படிக்க : 40 சதவிகிதம் அதிகரித்த குழந்தைத் திருமணங்கள் - தமிழ்நாட்டில் அதிர்ச்சி!

சங்ககால இலக்கியங்கள் குறிப்பிடும் குறிப்பாக தொல்காப்பியம் குறிப்பிடும் ”ஆகோள்” அதாவது ஆநிரை கவர்தல் அல்லது கால்நடைகளைக் கவர்ந்து செல்லுதல் பற்றிக் கூறும் முதல் நடுகல் இதுவே ஆகும் தமிழ் சமுதாயம் அக்காலத்தில் எழுத்தறிவு பெற்றிருந்த சமுதாயமாக இருந்தது என்பதற்கும் பிராகிருதம் போன்ற வடமொழி கலப்பின்றி தமிழ் சொற்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர் என்பதற்கும் புள்ளிமான் கோம்பையில் கிடைத்த இந்த நடுகற்களை சான்றாக இருக்கிறது என்று தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம்  தெரிவிக்கின்றது

தலைப்பு செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
இன்று மகாளய அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
இன்று மகாளய அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
NH-744 நிலம் கையகப்படுத்தல்: இழப்பீடு பெறாதோருக்கு விருதுநகரில் சிறப்பு முகாம்!
NH-744 நிலம் கையகப்படுத்தல்: இழப்பீடு பெறாதோருக்கு விருதுநகரில் சிறப்பு முகாம்!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
Embed widget