Child marriage in Lockdown | 40 சதவிகிதம் அதிகரித்த குழந்தைத் திருமணங்கள் - தமிழ்நாட்டில் அதிர்ச்சி!
2020ம் ஆண்டு மே மாதத்தில் குழந்தைத் திருமணங்கள் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளன. 2000ம் ஆண்டு கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவின் தாக்கம் முன்பை விட 2021ம் ஆண்டில் அதிகமாகிவிட்டது; அதனால் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளார்கள். சரியான நேரத்தில் தலையிடாவிட்டால் குழந்தைகள் திருமணங்கள் போன்ற பல்வேறு வன்முறைகளை சந்திக்க நேரிடுவார்கள்.

கொரோனா பேரிடர் காலத்தில் குழந்தைத்திருமணம் குறித்த புகார்கள் கடந்த ஆண்டு தொடங்கியே தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து எழத்தொடங்கின.தற்போது இந்தப் பேராபத்து தமிழ்நாட்டையும் தாக்கியுள்ளது.இதுகுறித்த செய்தி அறிக்கை ஒன்றை தன்னார்வக் குழந்தைகள் உரிமை நிறுவனமான சி.ஆர்.ஒய் (CRY) அமைப்பு வெளியிட்டுள்ளது. அவர்களது அறிக்கையில்,’சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் குழந்தைத் திருமணங்கள் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளன. 2000ம் ஆண்டு கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவின் தாக்கம் முன்பை விட 2021ம் ஆண்டில் அதிகமாகிவிட்டது; அதனால் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளார்கள். சரியான நேரத்தில் தலையிடாவிட்டால் குழந்தைகள் திருமணங்கள் போன்ற பல்வேறு வன்முறைகளை சந்திக்க நேரிடுவார்கள். இந்நிலையில் முகூர்த்த தேதிகள் நிறைந்த மே மாதம், குழந்தைகளை மேலும் பாதிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
சேலம், தர்மபுரி, ராமநாதபுரம் ,திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்கள், 10 தொகுதிகள் மற்றும் 72 பழங்குடியின் குக்கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இந்த நிலைமை உள்ளது. சேலம் மாவட்டத்தில் 2019ம் ஆண்டு மே மாதத்தில் 60 குழந்தைத் திருமணங்கள் கண்டறியப்பட்டது. இது 2020ம் ஆண்டு மே மாதத்தில் 98 ஆக உயர்ந்தது. 2010ம் ஆண்டில் சுமார் 150 குழந்தைத் திருமணங்கள் தர்மபுரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. 2020ம் ஆண்டு மே மாதத்தில் 192 ஆக உயர்ந்தது. ஒரே மாதத்தில் இது அதிகரிக்க பல முகூர்த்த நாட்களே காரணம், இந்நிலையை கொரோனா மிகவும் துரிதப்படுத்திவிட்டது
'தொற்றுநோய் காரணமாக தகவல்களைச் சேகரிக்க மிகவும் கடினமாக இருந்தது. மேலே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கை மிகவும் கவலையான போக்கைக் குறிக்கின்றன. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.
கொரோனாவால் பெரும்பாலான கல்வி மையங்கள் மூடப்பட்டுள்ளன. தொலைதூரக் சுல்வி பெருகியுள்ளது. எந்தவொரு கல்வியும் இவ்வாததாலும், எளிய குடும்பங்களுக்கு போதிய வளங்கள் இல்லாததாலும், ஆணாதிக்க மனநிலையினால், குழந்தைகளின் மீதான உரிமை மீறல்கள் மிகவும் அதிகமாவிட்டது, “என்று CRY அமைப்பின் மேம்பாட்டு பணிகளின் பொது மேலாளர் ஜான் ராபர்ட்ஸ் கூறினார்.

மேலும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட காலத்தில் இதை செய்தோம் கலைகளைப் பயன்படுத்துவதிலிருந்து, பன்முக அறிவு அடிப்படையிலான தொகுதிக்கூறுகளைப் பயன்படுத்தி அவர்கள் அந்தக் காலம் முழுவதும் ஏதேனும் ஒரு வகையான செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதை உறுதிசெய்தோம்,
சேலம் மாவட்டத்தில் 2019ம் ஆண்டு மே மாதத்தில் 60 குழந்தைத் திருமணங்கள் கண்டறியப்பட்டது. இது 2020ம் ஆண்டு மே மாதத்தில் 98 ஆக உயர்ந்தது. 2010ம் ஆண்டில் சுமார் 150 குழந்தைத் திருமணங்கள் தர்மபுரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. 2020ம் ஆண்டு மே மாதத்தில் 192 ஆக உயர்ந்தது. ஒரே மாதத்தில் இது அதிகரிக்க பல முகூர்த்த நாட்களே காரணம்
சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி (2011). 0-16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 869 சதவீத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளது. தர்மபரி (119%) மற்றும் சேலம் (105%) ஆகிய மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான குழந்தை திருமணங்கள் நிகழ்ந்த மாவட்டங்களாக உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் உள்ள குழந்தைகளின் உரிமை மீறல்களின் சாத்தியக்கூறுகளையும் இது குறிக்கிறது. இது முன்பைவிட கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வைக்கிறது.
கொரோனா நிலைமையை சீர்செய்ய அரசாங்கம். அனைத்து வளங்களையும் விரிவுபடுத்த வேண்டியிருக்கும் அதேவேளையில் குழந்தை திருமண பிரச்சினையிலும் கவனம் செலுத்த வேண்டும்
இதற்கு கிராமப்புற குழந்தைகள் பாதுகாப்புக் குழுவை வலுப்படுத்துவதோடு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவர்களுக்காகக் குரல்கொடுத்து அவர்களுக்கு சிறப்பான மகிழ்ச்சியானதொரு வாழ்க்கையை அமைக்க அனைவரும் கூட்டாகச் செயல்பட வேண்டியிருக்கிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: ஆன்லைனில் மருத்துவர் மறுபணிக்கான கவுன்சிலிங்; ‛வெளிப்படைத்தன்மை’ என டாக்டர்கள் வரவேற்பு





















