திண்டுக்கல்: கொரோனா காலத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் - ஒரே வாரத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே வாரத்தில் 4 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

FOLLOW US: 

தொடர்ந்து சிக்கும் போலி மருத்துவர்கள் கடந்த 1 வாரத்தில் போலியாக மருத்துவம் பார்த்த 4 பேர் கைது. கொடைக்கானல் பூண்டி கிராமத்தில் மருத்துவத்தில்  பக்கவிளைவுகள் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள்  அரசு மருத்துவமனையில் அனுமதி, சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி
திண்டுக்கல்: கொரோனா காலத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் - ஒரே வாரத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை, பூண்டி, கூக்கால், கிளாவரை, குண்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை மற்றும் ஆராம்ப சுகாதார நிலையம் இல்லாத காரணத்தினால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள்  கொடைக்கானல்,மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு  வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் இந்த மலை கிராமங்களில் மருத்துவர் மற்றும் மருத்துவமனைகள் இல்லாததால் மருத்துவர்களிடம் செவிலியராக பணிபுரிந்த சிலர் அப்பகுதியில் கிராம மக்களை குறி வைத்து வீடு வாடகைக்கு எடுத்து மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து,மாத்திரைகளை வாங்கி போலியாக அரை குறையாக மருத்துவம்  பார்த்து வந்ததாக கூறப்படுகிறது,திண்டுக்கல்: கொரோனா காலத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் - ஒரே வாரத்தில் 4 பேர் கைது

இதில் பூண்டி பகுதியில்  மருத்துவர் என கூறி தேவி என்பவர்  போலியாக மருத்துவம் பார்த்ததில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 20க்கு மேற்பட்டோர் பக்கவிளைவுகள் ஏற்பட்டு  அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர  சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பெற்று சிகிக்சை வருகின்றனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த   நாகராஜ் (55)  என்பவர் பக்கவிளைவுகள் ஏற்பட்டு அவதிப்பட வந்த நிலையில்  இன்று மேல்சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் வழியில்  மரணம் அடைதார். மேலும் மேல்மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்க காய்ச்சல்,சளி  தென்பட்டால் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பூம்பாறை,குண்டுபட்டி கிராமங்களில் போலியாக மருத்துவம் பார்த்த மூன்று பேரை ஏற்கனவே  கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்,திண்டுக்கல்: கொரோனா காலத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் - ஒரே வாரத்தில் 4 பேர் கைது

கொடைக்கானல் உள்ளடங்கிய கிராமப் பகுதிகளில் தொடர்ந்து போலி மருத்துவர்கள் சிக்குவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் முறையான சிகிச்சைக்கு உரிய மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளை நாட வேண்டுமெனவும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய் கடுமையாக பரவி வரும் நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காவல் துறையினரும், சுகாதாரத்துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: kodaikanal fake doctor medical awarness

தொடர்புடைய செய்திகள்

Kodaikanal Moth Update: பிரம்மாண்ட  கூடாரம் கட்டிய அந்துப்பூச்சி - ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்!

Kodaikanal Moth Update: பிரம்மாண்ட  கூடாரம் கட்டிய அந்துப்பூச்சி - ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்!

தேனி : தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று..!

தேனி : தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று..!

Corona Update : மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களின் இன்றைய கொரோனா அப்டேட்..!

Corona Update : மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களின் இன்றைய கொரோனா அப்டேட்..!

முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

கந்து வட்டி தொல்லை; வீடியோ பதிவிட்டு தற்கொலை

கந்து வட்டி தொல்லை; வீடியோ பதிவிட்டு தற்கொலை

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!