மேலும் அறிய

விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனி , திண்டுக்கல்லில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு..!

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தேனி , திண்டுக்கல் பகுதிகளில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு. மல்லிகை பூ கிலோவிற்கு 1200 ருபாய் வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான  விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் அனைத்து கோயில்களிலும் விழா வழிபாடுகள் நடைபெறும். இதுதவிர  விழாவையொட்டி வீடுகளில் மக்கள் பூஜைகள் செய்து விநாயகருக்கு கொளுக்கட்டை படையல் வைத்து வழிபாடு நடத்தப்படுவர். மேலும் சிறிய அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்படும்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனி , திண்டுக்கல்லில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு..!

பொதுவாக விழாக்களில் அதிக இடம் பிடிப்பது பூக்கள்தான். இதனால் சதுர்த்தி விழா விற்பனைக்காக திண்டுக்கல் மற்றும் தேனியில் விற்பனையாகும் பூக்கள் விலை அதிகரித்து விற்கப்பட்டது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பூக்களை வாங்குவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்குவதற்கு மார்க்கெட்டில் குவிந்தனர். வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கினர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனி , திண்டுக்கல்லில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு..!

இதனால் பூக்களின் விலை இன்று அதிகாலை முதலே  உயர்ந்தது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,100-க்கு விற்றது. இதேபோல் முல்லைப்பூ ரூ.520-க்கும், சாதிப்பூ ரூ.400-க்கும், காக்கரட்டான் ரூ.800-க்கும், அரளி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், ரோஜா ரூ.130-க்கும், வாடாமல்லி ரூ.70-க்கும், கோழிக்கொண்டை ரூ.40-க்கும் விற்பனை ஆனது. ஒரேநாளில் 20 டன் பூக்கள் விற்பனையானது. விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனி , திண்டுக்கல்லில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு..!

அதே போல் தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கம்பம் , போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை இன்று அதிகரித்தே விற்பனையானது. ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் செவ்வந்தி, காக்கரட்டான், கனகாம்பரம், முல்லை உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று குறைவாக இருந்தது. இந்தநிலையில் இன்று மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து விற்பனையானது. ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பூக்களின் தேவை அதிகரித்ததால் மார்க்கெட்டில் வியாபாரிகள் போட்டிப்போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனி , திண்டுக்கல்லில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு..!

இதுதவிர அவல், பொரி, பேரிக்காய் மற்றும் கொய்யா, மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், தேங்காய், வெற்றிலை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதேபோல் விநாயக பெருமானுக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. இதனால் பச்சரிசி மாவு, வெல்லம், எள், கொண்டைக்கடலை ஆகியவற்றையும் மக்கள் வாங்கினர். இதனால் பூ மார்க்கெட் மட்டுமின்றி மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் விற்பனையும் களைகட்டியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget