மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
கர்நாடகாவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்
பண்டிகை கால சிறப்பு ரயில்கள் குறித்த ரயில்வே நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்.
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு அருகே உள்ள எஸ்வந்த்பூர் - திருநெல்வேலி மற்றும் மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் (06566) அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய புதன்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு எஸ்வந்த்பூர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள் 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சனாதன தர்மத்தின் முதல் எதிரியாக தொல். திருமா திகழ்கிறார் - வைகோ
மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில்
மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் (06253) இன்று மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டது நாளாஇ அதிகாலை 05.00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு கட்டண ரயில் (06254) அக்டோபர் 1 அன்று மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.25 மணிக்கு மைசூர் சென்று சேரும். இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion