தேனி : 2 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றிய திமுக உறுப்பினர்கள்
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடமலை மயிலை, ஆண்டிபட்டி 2 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளை திமுக கைப்பற்றியது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 2, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, பிச்சம்பட்டி, ராஜதானி, ராமகிருஷ்ணாபுரம், அழகர் நாயக்கன்பட்டி, வடபுதுப்பட்டி, நாகலாபுரம் ஆகிய ஊராட்சி மன்றங்களில் காலியாக உள்ள தலா ஒரு உறுப்பினர் பதவி என மொத்தம் ஒன்பது பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ஜெயா, அதிமுக சார்பில் தீபா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 4 என மொத்தம் 6 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். அதே போல் கடமலை, மயிலை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கருப்பையா, அதிமுக சார்பில் குணசேகரன், 9 சுயேட்சை வேட்பாளர்கள் என 11 பேர் போட்டியிட்டதையடுத்து தேர்தல் முடிவுகளான வாக்கு எண்ணிக்கை பணியானது நடைபெற்றது.
ஆண்டிபட்டி, கடமலை,மயிலை ஊராட்சி ஒன்றியக் குழுவில் தலா ஒரு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியானது அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 3,472 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் திமுக வேட்பாளர் ஜெயா 1,918 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தீபா 1,442 வாக்குகள், அமமுக சார்பில் போட்டியிட்ட வீரக்காள் 48 வாக்குகள், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட நாச்சியம்மாள் 12 வாக்குகள் பெற்றிருந்தனர்.
க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 3,509 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் திமுக வேட்பாளர் கருப்பையா 1,702 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பிச்சைக்கனி 1,099 வாக்குகள், அதிமுக வேட்பாளர் குணசேகரன் 573 வாக்குகள், அமமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் 25 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் 14 வாக்குள் பெற்றிருந்தனர்.
கதிர்நரசிங்காபுரம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் முருகலட்சுமி, ராஜதானி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் த.பாப்பா, போ.நாகலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் பெருமாள் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்:
Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!
தேனி : காசிக்கு நிகரான பெரியகோவில், பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..