மேலும் அறிய

H. Raja: மிகப்பெரிய குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வது ஏன் - ஹெச்.ராஜா கேள்வி

திமுக ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் கலைக்கப்படலாம். மிகப்பெரிய குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வதும், 38 நாட்களாக ஒரு அமைச்சரை மருத்துவமனையில் வைத்துள்ளது ஏன் - ஹெச். ராஜா கேள்வி

சட்டத்தை மதிக்காமல் தமிழக முதல்வரை சிலர் தவறாக வழிநடத்தும் நிலையில் தமிழக அரசு இன்னும் ஓரிரு வாரங்களில் கலைக்கப்படலாம் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Flight Serivice Delayed: சென்னையில் விடிய விடிய மழை.. பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

H. Raja: மிகப்பெரிய குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வது ஏன் - ஹெச்.ராஜா கேள்வி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

பழனி மலைக்கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம் என்றும், தமிழக அரசுதான் மதச்சார்பற்றதே தவிர, தமிழக அரசின் இந்து சமய‌ அறநிலையத்துறை என்பது மத சார்புடையதுதான் என்றும், இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலை செய்யவேண்டும். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து பணிகளையும் செய்துவருவதாகவும் தெரிவித்தார்‌.

உதாரணமாக பழனி அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் உள்ள பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களில் பல மாடுகளை கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்பப்புவதாக குற்றம் சாட்டினார். பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு 288 ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தை சிப்காட் நிறுவனம் அமைக்க சேகர் பாபு முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

Ashwin Record: 33 முறை 5 விக்கெட்டுகள் - அடுத்து அடுத்து சாதனைகளை அள்ளிக் குவித்த அஸ்வின்..

H. Raja: மிகப்பெரிய குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வது ஏன் - ஹெச்.ராஜா கேள்வி

தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அரசுக்கு சொந்தமானது தவிர, இந்து கோவில்கள் அரசுக்கு சொந்தமானது அல்ல என்றும், அது இந்து மக்களுக்கு சொந்தமானது என்றும் தெரிவித்தார். பழனி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த சம்பவம் போல வரும் காலங்களில் பழனி கோவிலில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெரிய பிரச்சனையாக  இல்லை என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளது கேலிக்குரியது என்றும், பாமக தொண்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்திருப்பது, 50 விசாரணைக் கைதி மரணம் ஆகியவை நடந்துள்ள நிலையில், முதல்வருக்கு தங்களது குடும்பத்தில் எப்போது சிபிஐ நுழையுமோ? என்ற அச்சமும், முதல்வர் குடும்பத்தில் துர்கா ஸ்டாலின் தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால், சிபிஐ தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருப்பது ஆகியவை எல்லாம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தெளிவாக விளக்குகிறது என்றும்,    

5 years of Kadaikutty Singam : உறவுகளின் உன்னதம் போற்றிய 'கடைக்குட்டி சிங்கம்': இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவு..!

H. Raja: மிகப்பெரிய குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வது ஏன் - ஹெச்.ராஜா கேள்வி

திமுக ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் ஆட்சி கலைக்கப்படலாம் என்றும், மிகப்பெரிய குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வதும், 38 நாட்களாக ஒரு அமைச்சரை மருத்துவமனையில் வைத்துள்ளதும், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத அளவில் மறைத்து வைத்துள்ளது ஏன் என்றும் கடுமையாக விமர்சித்தார். சட்டத்தை மதிக்காமல் முதல்வரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள்   என்றும் எச்.ராஜா தெரிவித்தார். 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Embed widget