மேலும் அறிய

திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.

இண்டியா கூட்டணிக் கூட்டத்தை திமுக புறக்கணிக்கக் கூடாது. முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பழனியில் பேட்டி 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வி. நாராயணசாமி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற உள்ள இண்டியா கூட்டணிக் கூட்டத்தை திமுக புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது கவலைக்குரியது என்றார். மாநில அளவிலான கூட்டணிகளும், அகில இந்திய அளவிலான கூட்டணிகளும் வேறுபட்டவை என்பதை திமுக உணர வேண்டும் என்றும், மதவாத மற்றும் மக்கள் விரோத மோடி அரசை எதிர்கொள்ள இண்டியா கூட்டணி பலமாக இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.

திமுக தனித்து நின்று போராடினால் வெற்றி பெற முடியாது. இண்டியா கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டால் தான் தேசிய அளவில் வலிமையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஊடகங்களின் கணிப்புகளை மீறி மக்கள் மாற்றத்தை விரும்பியிருப்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகியுள்ளதாக கூறினார். அரசியல் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு பாடமாக அமைந்துள்ளதாகவும், மக்கள் விருப்பமே இறுதியில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.

புதுச்சேரி தேர்தல் தோல்வி குறித்து பேசிய நாராயணசாமி, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருந்தபோதிலும், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி மற்றும் திமுக மாநில நிர்வாகிகளின் அணுகுமுறையே தோல்விக்குக் காரணமாக அமைந்தது என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து தமிழகத்தில் புதியதாக அமைந்துள்ள தவெக ஆட்சி குறித்து பேசிய அவர், முதல்வர் விஜய் தனது முதல் உரையிலேயே ஊழலற்ற நிர்வாகம் வழங்குவதாக உறுதியளித்திருப்பதால், அவரது ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை புதிய அரசு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget