மேலும் அறிய
Advertisement
ஆவினில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 47 பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்..
”தொழிற்சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை திரட்டி மதுரை ஆவினை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
மதுரை ஆவினிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 47 பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் பணி வழங்காவிட்டால் ஆவினை முற்றுகையிட்டு போராடுவோம் - என சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் ஆவின் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை.
கடந்த 2020- 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்டவிதிகளின் படி கூட்டுறவு ஒன்றிய பணியாளர், துணை மேலாளர், டெக்னீசியன், முதுநிலை ஆலை உதவியாளர் என 200க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக தேர்வான ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஆவின் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் பணிபுரிந்துவந்த மதுரை தேனி சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பணிபுரிய கூட 25 பணியாளர்களின் பணி நியமனத்தை முறைகேடு எனக் கூறி பணி நீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த பணியிடை நீக்கத்திற்கு இடைக்கால தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கூறி ஆவினில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை ஆவினில் பணிபுரிந்த 47 பணியாளர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றியும், விசாரணை நடத்தாமலயே திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் பணிநீக்கம் செய்யப்பட்ட 47 ஊழியர்கள் மற்றும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு உயர்நீதிமன்ற இடைக்கால தடையை மீண்டும் பணி அளிக்க வேண்டும் என கூறியும் முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய சி.ஐ.டி.யு., கூட்டுறவு சங்க செயலாளர் லெனின் பேசியபோது..,"விடியல் அரசு என்று சொல்லி வெற்றிபெற்ற தி.மு.க., அரசு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருக்கக்கூடிய ஊழியர்களை நிரந்தர படுத்துவோம் என கூறிய நிலையில் முறையாக தேர்வு எழுதி பணியமர்த்தப்பட்ட தமிழக முழுவதிலும் உள்ள 205 பணியாளர்களை எந்தவித விசாரணையும் முன் அறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்துள்ளது. எந்த வகையில் நியாயம் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணியில் அமர்த்த வில்லை என்றால் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை திரட்டி மதுரை ஆவினை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர் அருவியாக எங்கு இருக்கு தெரியுமா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion