Crime: குடிபோதையில் தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திய மனைவி.. திண்டுக்கல்லில் பரபரப்பு
குடிபோதையில் வந்ததை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் கத்தியால் குத்த முயன்றபோது ஏற்பட்ட தகராறில் கணவனை மனைவி கத்தியால் குத்தினார்.
நாடு முழுவதுமே போதையால் பல்வேறு பிரச்சனைகளும் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை கோடிகளைத் தாண்டி இருக்கும் நிலையில் சிறு வயது முதல் முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் பல்வேறு குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் கணவன் மனைவியை தொடர்ந்து கொடுமை செய்து வந்த நிலையில் மனைவி கணவன் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Astrology: கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?
திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் சாலையில் உள்ளது முருக பவனம் எனும் பகுதி அப்பகுதியில் இந்திரா நகரில் வசித்து வருபவர் கண்ணன் (45) . இவர் அப்பகுதியில் உள்ள இரண்டு சக்கரம் பழுது பார்க்கும் கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி மோகனா தேவி வீட்டில் அருகே உள்ள பிரபலமான சேமியா கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு நிவேதா, மதன்குமார் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் படித்து வரும் நிலையில் கண்ணன் வீட்டின் அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ள நிலையில் வேலை முடிந்தவுடன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் கண்ணன். மேலும் மது அருந்தி வரும்போது தொடர்ந்து மனைவியை அடித்து துன்புறுத்துவது தெருவில் ரகளை செய்வது குழந்தைகளுக்கு தொல்லை தருவது என அவரது தொந்தரவு இருந்து வந்துள்ளது.
Flipkart ல் அதிக தள்ளுபடியில் iPhone 15 விற்பனை; மேலும் மலிவாக பெறுவதற்கான டிப்ஸ்..!
இந்நிலையில் இன்று வழக்கம் போல் குடித்து விட்டு வந்த கண்ணன், மோகனா தேவி இடம் ரகளை செய்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மோகனா தேவியை குத்த முயற்சித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அவர் கண்ணனை தள்ளிவிட்டுள்ளார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் தன்னை குத்தி கொலை செய்து விடுவாரோ என அச்சப்பட்ட மோகனா தேவி கண்ணன் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்து மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கண்ணனின் சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனை குத்தி கொலை செய்த மோகனா தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.