மேலும் அறிய
Advertisement
நீதிமன்றம் அரசை இயக்கி கொண்டிருக்க முடியாது - திருச்சியில் 5 பேருந்துநிலையங்கள் அமைக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து
அரசை நீதிமன்றம் இயக்கிக் கொண்டிருக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்
திருச்சியைச் சேர்ந்த ரிஸ்வான் ஹூசேன், மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்சி மாநகருக்குள் வர 11 வழித்தடங்கள் உள்ளன. திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது. திருச்சி மாநகருக்குள் நுழையும் 11 வழித்தடங்களில் திருவறும்பூர், அல்லித்துறை உள்ளிட்ட 5 இடங்களில் புதிதாக பேருந்து நிலையம் அமைத்தால் தேவையில்லாமல் வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் நுழைவதை தடுக்க முடியும். எனவே, சமயபுரம் டோல்கேட் உட்பட 5 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும், புதிய பேருந்து வழித்தடங்களையும், மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, அரசை நீதிமன்றம் இயக்கிக் கொண்டிருக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
வரி பாக்கியை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய வழக்கு - நிர்வாக காரணங்களுக்காக சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம்
தஞ்சை புதுக்கோட்டையைச் சேர்ந்த திருச்செந்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை நகராட்சி 31 வது வார்டில் போட்டியிடுகிறேன். விதிப்படி தேர்தலில் போட்டியிடபவரும், அவரது குடும்ப நபர்களும், நகராட்சிக்கு வரி நிலுவை வைத்திருக்கக்கூடாது. புதுக்கோட்டை நகராட்சி 31-வது வார்டில் போட்டியிடும் ஸ்ரீதேவி என்பவரின் கணவர் வெங்கடேசன் பெயரில் தொழில் வரி 6,715 ரூபாய், குடிநீர் வரி 12,198 ரூபாய், அவரது தந்தை பெயரில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 110 ரூபாய் என மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து, 23 ரூபாய் வரி பாக்கி உள்ளது. இவற்றை மறைத்து போலியான ஆவணங்களை தயார் செய்து ஸ்ரீதேவி வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.
இது வேட்பாளர்களுக்கான விதிகளுக்கு எதிரானது. இதனால் ஸ்ரீதேவியின் வேட்பு மனுவை ஏற்க ஆட்சேபணை தெரிவித்த நிலையிலும், அது கருத்தில் கொள்ளப்படவில்லை. ஆகவே, ஸ்ரீதேவியின் வேட்பு மனுவை நிராகரிக்க புதுக்கோட்டை நகராட்சியின் தேர்தல் அலுவருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரெந்ஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, நிர்வாக காரணங்களுக்காக வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion