1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

மதுரை : 1000-ஐ எட்டிய கொரோனா உயிரிழப்பு : அச்சத்தில் மக்கள்

மதுரை மாவட்டத்தில் இன்று இறப்பு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.

FOLLOW US: 

 உலகம் முழுக்க பாரபட்சம் இன்றி பரவிய கொரோனா நோய்  காலமாற்றத்துக்கு ஏற்றார்போல உருமாற்றமடைந்து வருகிறது. இவ்வாறு மாற்றமடைந்த தொற்று இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸை `டெல்டா' வேரியன்ட்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இவை புதிய அறிகுறிகளை கொண்டு உறுப்புகளை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் கொரோனா பாதிப்பு குறித்து இன்னும் கவனம் தேவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மதுரை : 1000-ஐ எட்டிய கொரோனா உயிரிழப்பு : அச்சத்தில் மக்கள்

ஒரு பக்கம் கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் எழுந்து வருகிறது. இந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை குறைந்ததால் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கொரோனா முழுமையாக ஒழிந்துவிட்டதுபோல் சமூக இடைவெளிகள் இன்றியும், முகக்கவசம் அணியாமலும் வெளியே சுற்றிவருகின்றனர். இதனால் மிகப்பெரும் அச்சம் உருவாகி வருகிறது. இப்படியான அசாதாரண நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.மதுரை : 1000-ஐ எட்டிய கொரோனா உயிரிழப்பு : அச்சத்தில் மக்கள்

தென்மாவட்டங்களில் மதுரையில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கும் என கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 369 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,049 ஆக உயர்ந்தது. அதே போல் இன்று 1255 நபர்கள்  குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 59280 அதிகரித்துள்ளது. இன்று மட்டும்  15 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரையில் இறப்பு எண்ணிக்கை 1003 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மதுரை மாவட்டத்தில் 8766 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர். மதுரை மாவட்டத்தில் இன்று இறப்பு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது என்ற தகவல் கசப்பானது.

மதுரை : 1000-ஐ எட்டிய கொரோனா உயிரிழப்பு : அச்சத்தில் மக்கள்

கடந்த மூன்று நாட்களாக மாவட்டம் முழுதும் தடுப்பூசி இல்லாத சூழலில் பலரும் மருந்துவமனைக்கு வந்து ”ஊசி இருக்கா?, இல்லையா?” என கேட்டு ஏமாற்றுத்துடன் செல்கின்றனர். கோவிஷீல்டு, கோவேக்சின் என இரண்டில் ஒரு தடுப்பூசியாவது போட்டுவந்த நிலையில் இரண்டு தடுப்பூசியும் கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அரசு  தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க ஏற்பாடு செய்யவேண்டும். அதே போல் பொதுமக்களுக்கு  அலைபேசி எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் தடுப்பூசி நிலவரம் குறித்து கேட்டறிந்து கொள்ள உதவி செய்யலாம். மேலும் அவர்கள் பெயர், போன் நம்பர், ஆதார் நம்பரை குறித்துக் கொண்டு முன்பதிவு செய்யலாம். அதனால் தடுப்பூசிக்காக மக்கள் காத்திருக்கும் சூழலையும், கூட்ட நெரிசலையும் தவிர்க்க முடியும். தமிழ்நாட்டில் ஐவுளி கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.மதுரை : 1000-ஐ எட்டிய கொரோனா உயிரிழப்பு : அச்சத்தில் மக்கள்

இந்நிலையில் தடையை மீறி மதுரைமாசி விதிகள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ஜவுளி விற்பனை ஜோராக நடைபெறுகிறது. ஜவுளிகடைகளில் பின்புறம் வழியாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஜவுளிகடைகளிலும் 5 தளங்கள் வரை திறக்கப்பட்டு விற்பனை  செய்யப்படுகிறது. இந்த ஜவுளிகடைகளில் விற்பனையின் போது விற்பனையாளர்களும், வாடிக்கையாளர்களும் முகக்கவசம் அணியாமல் குவிந்துள்ளனர். கடைகளில் செயல்படக்கூடிய லிப்ட்டுகளில் சமூக இடைவெளியின்றி 10-க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.  இதே போல் நகைகடைகளும் இவ்வாறு விதியை பின்பற்றாமல் செயல்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -பாரம்பரியம், பழமைன்னு ஏமாத்துவாங்க.. போலியை நம்பவேண்டாம்.. எச்சரிக்கும் ராஜராஜன் !

Tags: Vaccine Corona death madurai Corona damage 1000

தொடர்புடைய செய்திகள்

”இந்த வருஷம் போஸ்டர் அடிக்கல, உதவி செஞ்சோம்” :  விஜய் ரசிகர்களின் தரமான முடிவு..!

”இந்த வருஷம் போஸ்டர் அடிக்கல, உதவி செஞ்சோம்” : விஜய் ரசிகர்களின் தரமான முடிவு..!

Save Kodaikkanal : கொடைக்கானலைக் காப்பாற்றுங்கள்! - சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ஸ்டேட்டஸ்..

Save Kodaikkanal : கொடைக்கானலைக் காப்பாற்றுங்கள்! - சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ஸ்டேட்டஸ்..

TN Corona cases : தென் மாவட்ட கொரோனா தொற்று: இன்றைய நிலவரம் என்ன?

TN Corona cases : தென் மாவட்ட கொரோனா தொற்று: இன்றைய நிலவரம் என்ன?

தேனி : கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூன் மாத மின் உற்பத்தி அதிகரிப்பு..

தேனி : கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூன் மாத மின் உற்பத்தி அதிகரிப்பு..

viruthunagar Update: ‛ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு... அப்பா அம்மா’

viruthunagar Update: ‛ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு... அப்பா அம்மா’

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE : நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

Tamil Nadu Coronavirus LIVE : நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

முதல்வரின் காலைத்தொட்டு கும்பிட்ட கலெக்டர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

முதல்வரின் காலைத்தொட்டு கும்பிட்ட கலெக்டர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Thalapathy 65 First Look Poster: விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்: மாஸ் ’BEAST'

Thalapathy 65 First Look Poster:  விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்:  மாஸ் ’BEAST'

இனி ஆன்லைன் க்ளாஸ் இப்படித்தான் நடக்கவேண்டும்: தமிழக அரசின் 11 கட்டளைகள்..!

இனி ஆன்லைன் க்ளாஸ் இப்படித்தான் நடக்கவேண்டும்: தமிழக அரசின் 11 கட்டளைகள்..!