மேலும் அறிய

சினிமாவை மிஞ்சும் ‛செட்டப்’ : குழந்தை இறந்ததாக ஏமாற்றிய காப்பாக நிர்வாகிகள் ‛எஸ்கேப்’

காப்பகத்தில் இருந்த குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறி  போலியான ஆவணங்களை தயார் செய்து, நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை  மேலூரை அடுத்த சேக்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா.  இவருக்கு  மனநலம் குன்றிய  பாதிப்பு  உள்ளது. இவரது மூன்று குழந்தைகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்  அசாருதீன் என்பவர் மூலமாக ரிசர்வு லைன் பகுதியில் உள்ள தனியார்  அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.
 
சினிமாவை மிஞ்சும் ‛செட்டப்’ : குழந்தை இறந்ததாக ஏமாற்றிய காப்பாக நிர்வாகிகள் ‛எஸ்கேப்’
 
 இந்நிலையில் ஐஸ்வர்யாவின் மூன்றாவது குழந்தையான மாணிக்கம் என்ற ஒரு வயது ஆண் குழந்தைக்கு கடந்த 13ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நரிமேடு நகர்புற சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனத்தினர் தகவல் அளித்ததோடு கொரோனா உறுதியானதால் அரசு கொரோனா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு செல்வதற்கான பரிந்துரை கடிதம் தொடர்பான ஆவணம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

சினிமாவை மிஞ்சும் ‛செட்டப்’ : குழந்தை இறந்ததாக ஏமாற்றிய காப்பாக நிர்வாகிகள் ‛எஸ்கேப்’
இந்நிலையில் நேற்று காலை கொரோனா பாதிப்பால் குழந்தை மாணிக்கம் உயிரிழந்த நிலையில் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக கூறி  தத்தனேரி மயான ஆவணங்கள் மற்றும் புதைக்கப்பட்ட படத்தையும் சமூக ஆர்வலருக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனை பார்த்த அசாருதீன் ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாகவும், குழந்தை காணாமல் போனதாகவும் கூறி தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நேற்றிரவு மாவட்ட குழந்தை நல அலுவலர் மற்றும் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட ரசிது எண் போலியானதாக இருந்துள்ளதும், அதே ரசிது எண்ணில் ஏற்கனவே கடந்த மே மாதம் 75வயது நிரம்பிய முதியவர் எரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து தத்தனேரி மயான ஊழியர்கள் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தத்தனேரி மற்றும் நகர்புற மருத்துவமனை பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி குழந்தையை புதைத்தது போல ஆவணங்களை உருவாக்கியது தெரியவந்துள்ளது. 
 
சினிமாவை மிஞ்சும் ‛செட்டப்’ : குழந்தை இறந்ததாக ஏமாற்றிய காப்பாக நிர்வாகிகள் ‛எஸ்கேப்’
 
இதனையடுத்து போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக தத்தனேரி மின்மயானம் சுகாதார ஆய்வாளர் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனை மருத்துவர் ஆகிய இருவர் தரப்பிலும் தொண்டு நிறுவனத்தின் மீது மேலும் இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட தத்தனேரி மயானத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் ஏடிசி கிருஷ்ணகுமார் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தியபோது புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக அரசு இராசாசி மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளங்குழந்தை புதைக்கப்பட்ட இடம் என்பது தெரியவந்துள்ள நிலையில் மாணிக்கம் என்ற குழந்தை புதைக்கப்படவில்லை எனவும் உறுதியாகியுள்ளது. 

சினிமாவை மிஞ்சும் ‛செட்டப்’ : குழந்தை இறந்ததாக ஏமாற்றிய காப்பாக நிர்வாகிகள் ‛எஸ்கேப்’
இந்நிலையில் புகாருக்குள்ளான தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். தற்போது மாணிக்கம் என்ற குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் குழந்தை காணாமல் போனது எப்படி ஒருவேளை குழந்தை கடத்தப்பட்டுள்ளதா என்றும், தொண்டுநிறுவனத்தில் மேலும் இது போன்ற குழந்தைகள் குறித்த தகவல்கள் முன்னுக்குபின் முரணாக இருப்பது தெரியவந்த  அடிப்படையிலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "வெற்றி மாறன்தான் வாத்தியார்.. நான் ஸ்டூடண்ட்தான்" உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Embed widget