மேலும் அறிய
காலநிலை மாற்றத்தை ஏற்படுத்த அதிக மரங்களை நட வேண்டும் - கொச்சின் பல்கலை., பேராசிரியர்
கருத்தரங்கத்தில் பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட 300 மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.
![காலநிலை மாற்றத்தை ஏற்படுத்த அதிக மரங்களை நட வேண்டும் - கொச்சின் பல்கலை., பேராசிரியர் Cochin University Professor says To bring about climate change, more trees need to be planted - TNN காலநிலை மாற்றத்தை ஏற்படுத்த அதிக மரங்களை நட வேண்டும் - கொச்சின் பல்கலை., பேராசிரியர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/23/81dc412190adeb009410a4ad3a98e7d21708667634671184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நினைவுப் பரிசு வழங்கியபோது
காலநிலை மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் அதிக மரங்களை நட வேண்டும்.. (கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் கருத்து) (தேசிய கருத்தரங்கத்தின் அரசு கல்லூரி மாணவிகள் பங்கேற்பு )
சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு பொருளாதாரத் துறையில் காலநிலை மாற்றம் நிலையான வளர்ச்சி என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர் வெண்ணிலா வரவேற்க கல்லூரி முதல்வர் பொறுப்பு வகிக்கும் முனைவர் இந்திரா தலைமை வகித்து நிகழ்த்திய உரையில், “கிராமப்புற மாணவர்கள் கால சூழ்நிலை கணித்து பருவ மாற்றத்திற்கேற்ப இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். படிக்கும் காலங்களில் அரசு கல்லூரி மாணவிகளுக்கு இக்கருத்தரங்கு மிகப்பெரிய வாய்ப்பு. நிகழ்வை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். நிகழ்வில் பொருளாதாரத்துறை தலைவர் முனைவர் சீலா முன்னிலை வகித்தார்.
![காலநிலை மாற்றத்தை ஏற்படுத்த அதிக மரங்களை நட வேண்டும் - கொச்சின் பல்கலை., பேராசிரியர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/23/a864ebc458975fc6847e909f985d96c61708666673600184_original.jpeg)
தேசிய கருத்தரங்கத்திற்கு கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் அருணாச்சலம் பேசுகையில், “தற்போது உலகில் ஏற்படுகின்ற இயற்கையான கால சூழ்நிலை மாற்றம் மனித சமூகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படுத்துகின்றது. அவற்றை நோக்கி வளர்ந்து வரும் வருங்கால மாணவர்கள் சூழ்நிலை கணித்து தூய்மையான சமுதாயத்தை உருவாக்க மரங்களை நட வேண்டும்” என்றார். தொடக்க நிகழ்வில் முனைவர் பிச்சைமுத்து நன்றியுரை ஆற்றினார்.
![காலநிலை மாற்றத்தை ஏற்படுத்த அதிக மரங்களை நட வேண்டும் - கொச்சின் பல்கலை., பேராசிரியர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/23/903e011f4af73ba42acc9289ae42729f1708666908301184_original.jpeg)
தொடர்ந்து பேசிய அழகப்பா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் முனைவர் சுரேஷ் பேசுகையில், “காற்று மாசுபடுதல் கலைக்க மின்சாதன வாகனங்களை பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் அதிகமாக காற்றில் கார்பன் கலந்து வெப்ப நிலை உருவாகியுள்ளது. இதனால் இயற்கையான காலநிலை மாற்றம் அதன் தாக்கத்தை படங்களின் மூலம் விளக்கினார். பூமியை பாதுகாக்க பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்”என்றார். திருநெல்வேலி எம் டி டீ இந்து கல்லூரி இணை பேராசிரியர் முனைவர் ஜெயபிரபாகன் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி பேராசிரியர் முனைவர் சதீஸ்குமார் ஆகியோர் ஆய்வு கட்டுரை வாசித்த மாணவர்களுக்கு நெறியாளராக இருந்தன. பல்வேறு கல்லூரியில் இருந்து வருகை புரிந்த மாணவர்கள் 30 மேற்பட்டவர்கள் ஆய்வு கட்டுரை வாசித்தார்கள். கருத்தரங்கத்தில் பல்வேறு கல்லூரி சேர்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட 300 மேற்பட்டோர் பங்கு பெற்றனர். அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்க ஏற்பாட்டினை பொருளாதார துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்வினை மாணவி நித்யா கல்யாணி தொகுத்து வழங்கினார். இறுதியாக மாணவி சினேகா நன்றி உரை கூறினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CM MK Stalin: ”உழவர்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Manjappai Award: முதல் பரிசு ரூ.10 லட்சம்: பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மஞ்சப்பை விருது!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion