மேலும் அறிய

Chithirai Festival: பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகர்.. பக்தி பரவசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்..

சித்திரை திருவிழா முடித்து கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லாக்கில் எழுந்தருளி அழகர் மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.

சித்திரை திருவிழா முடித்து கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லாக்கில் எழுந்தருளி அழகர் மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் திருவிழா உலக புகழ்பெற்றது ஆகும். மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் முக்கிய விழாவான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர். தேரோட்டத்துடன் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா நிறைவு பெற்றது. மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவை தொடர்ந்து அழகர் கோயில் திருவைழா தொடங்கியது.  
சித்திரை திருவிழாவுக்காக மே 3  ஆம் தேதி  அழகர் கோயிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார். மே 4 ஆம் தேதி  மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. மே 5 ஆம் தேதி  தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை, தொடர்ந்து கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மே 6 ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 7 ஆம் தேதி திவான் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், நவதானியம், வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளை கொண்டு கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மல்லிகைப்பூ, சம்மங்கி, கனகாம்பரம், ரோஸ், துளசி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லாக்கில் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் முன் எழுந்தருளினார். கருப்பண்ணசாமி கோவில் சார்பில் வழங்கப்பட்ட மாலையை அணிந்து கொண்ட கள்ளழகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பூப்பல்லாக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர், அழகர் மலையினை நோக்கி புறப்பட்டார். இலட்சக்கணக்கான பக்தர்கள் பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசனம் செய்தனர். மே 9 இரவு கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்கோவிலுக்கு சென்றடைவார்.

CM Stalin: "அபாண்ட பொய்...! தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க வந்துள்ளீர்களா?" - ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் காட்டம்..!

Kerala Boat Tragedy: அதிர்ச்சி.. கேரள படகு விபத்தில் 22-ஆக உயர்ந்த உயிரிழப்பு.. முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று நேரில் ஆய்வு!

தலைப்பு செய்திகள்

விருதுநகர் மாவட்ட கலை விருதுகள்: 15 கலைஞர்களுக்கு ரூ.1.65 லட்சம் பரிசு!
விருதுநகர் மாவட்ட கலை விருதுகள்: 15 கலைஞர்களுக்கு ரூ.1.65 லட்சம் பரிசு!
மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள்: 3ஆம் நூற்றாண்டு பாண்டியர் வரலாறு வெளிச்சத்திற்கு!
மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள்: 3ஆம் நூற்றாண்டு பாண்டியர் வரலாறு வெளிச்சத்திற்கு!
குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் ‘மதுரம் 2026’ நிகழ்வு !
குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் ‘மதுரம் 2026’ நிகழ்வு !
கீழடி, கல்வி மேம்பாடு: முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும் - அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை !
கீழடி, கல்வி மேம்பாடு: முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும் - அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை !

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
DMK MLA Markandeyan : திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
Gold rate today : வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுத்ததா தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுத்ததா தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget