மேலும் அறிய

Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்

 ஜூலை 20  ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடரானது நடைபெறவுள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்த அமர்வில், எட்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றுவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அந்த வகையில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 விவாதம் செய்ய நான்கு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வருமான வரி (திருத்த) மசோதா 2026  மக்களவையில் மூன்று மணி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026; பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா, 2026; குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026; மற்றும் தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 ஆகியவை இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மேலும் கடந்த கூட்டத்தொடரில் தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதா, பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவற்றையும் இம்முறை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

முறைகேடு குறித்து கேள்வி எழுப்ப திட்டம்

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக நிகழும் சந்திப்பில் இரு அவைகளின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுப்பார். ஆனால் நீட் தேர்வு முறைகேடு, அயோத்தி கோயில் நன்கொடை திருட்டு போன்றவை குறித்து கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது. 

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் பரிந்துரைக்கும்  தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுகவின் நிலைப்பாடு என்ன?

இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழன்று கொண்டது. இதனால் கடும் கோபமடைந்த திமுக மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்து விலகியே இருக்கிறது. அதேசமயம் பாஜகவோடு திமுக இணக்கமாகும் சூழலும் நிலவுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதனால் பாஜகவின் சட்ட மசோதாக்களுக்கு திமுக எம்.பி.க்கள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பின்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்தாலே ஆதரவு தெரிவிப்பதற்கு சமமானது என்பதால் இந்த கூட்டத்தொடர் திமுக எம்.பி.க்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கும் கதையாக மாறியுள்ளது. எனினும் மத்திய அரசுக்கு எதிரான தங்களுடைய நிலைப்பாட்டில் பின்வாங்க போவதில்லை என திமுக எம்.பி.,க்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget