Madurai: ”முதலமைச்சர் விஜய்” - மதுரையில் ஒட்டப்பட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் பரபரப்பு
”இன்று 234 தொகுதியை சேர்ந்த மாணவர்கள் உங்களை தேடி கல்வித் திருவிழாவில்!!நாளை 234 தொகுதியை சேர்ந்த மக்களும் வாக்களிக்க உங்களுக்காக வா தலைவா” - மதுரையில் போஸ்டர்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான நடிகர் விஜய் தற்போது சினிமாவை கடந்து அரசியல் ரீதியான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அவர் நடித்து வெளியான திரைப்படங்கள் தொடர்பான ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மேடைகளில் பல்வேறு அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படையாக பேசி தான் அரசியலுக்கு வருவதையும் வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் வாக்காளர் விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டது.
இன்று 234 தொகுதியை சேர்ந்த மாணவர்கள் உங்களை தேடி கல்வித் திருவிழாவில்! நாளை 234 தொகுதியை சேர்ந்த மக்களும் வாக்களிக்க உங்களுக்காக வா தலைவா!! முதலமைச்சர் விஜய் என மதுரையில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்.
— arunchinna (@arunreporter92) June 21, 2023
Further reports to follow - @abpnadu
| #madurai | #vijay @LPRABHAKARANPR3 |... pic.twitter.com/dMycYUCTL0
இதனைத்தொடர்ந்து 10மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் விருதுகளை வழங்கினார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறினார். இது நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரை வாழ்த்தும் விதமாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு அழைக்கும் விதமாக இன்று 234 தொகுதியை சேர்ந்த மாணவர்கள் உங்களை தேடி கல்வித் திருவிழாவில்!! நாளை 234 தொகுதியை சேர்ந்த மக்களும் வாக்களிக்க உங்களுக்காக வா தலைவா!! முதலமைச்சர் என்ற வாசகத்துடன் தலைமைச் செயலகத்தில் விஜய் நின்று பேசுவது போல் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். தற்போது இந்த போஸ்டர் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் சோகம்..பெற்றோர் இரவில் போதை; வீதிக்கு வந்த 9 வயது சிறுமி, ஆறுதல் அளித்த கலெக்டர்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்