மேலும் அறிய
Advertisement
Special Train: சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்கள்.. இதோ முழு விபரம்!
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள்
தொடர் விடுமுறை நாட்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். சுபமுகூர்த்த நாட்கள், மிலாடி நபி ஆகியவற்றை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வருகிறது. இதையடுத்து, ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மிலாடி நபி முதலில் 16ம் தேதி கொண்டாடப்படும் என்ற நிலையில், பிறை காரணமாக மிலாடி நபி வரும் 17ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால், வரும் சனிக்கிழமை முதல் வரும் செவ்வாய் வரை விடுமுறை வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்கள் மற்றும் தனியார் பேருந்துகளிலும் அதிகளவு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென் மாவட்ட பயணிகளின் கூட்டு நெரிசலை குறைக்க சென்னை - ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்ள்ளது. அதன்படி தாம்பரம் - ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06103) செப்டம்பர் 19, 21, 23, 26, 28, 30 ஆகிய வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.55 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06104) செப்டம்பர் 20, 22, 24, 27, 29, அக்டோபர் 1 ஆகிய வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
எங்கு, எங்கு நின்று செல்கிறது
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”முதல்வரை சுற்றி இருக்கும் அமைச்சர்களுக்கு சமூக நீதி பற்றி தெரியுமா..?” விளாசிய அன்புமணி..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion