Breaking News LIVE 18th NOV 2024: லாட்டரி மார்டின் தொடர்பான இடங்களில் ரூ. 12 கோடி பறிமுதல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
- டெல்லியில் உச்சத்திற்குச் சென்ற காற்று மாசு; கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய ஆம் ஆத்மி அரசு
- டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் டெல்லியில் 10, 12ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவ.28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் கள ஆய்வு
- பா.ஜ.க. அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை; மகாராஷ்ட்ராவில் ஆட்சி மாற்றம் உறுதி – காங்கிரஸ் தலைவர் கார்கே
- குஜராத்திற்கு முக்கிய திட்டங்கள் மாற்றப்பட்டதால் மகாராஷ்ட்ராவில் வேலையில்லா திண்டாட்டம் – பிரியங்கா காந்தி
- பா.ஜ.க.வுடன் கூட்டணி தி.மு.க. திட்டம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு இல்லை – திருமாவளவன்
- தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
- வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
- விவசாயிகளின் நலன் கருதி பயிர்க்காப்பீடு செய்யும் காலக்கெடு நவ.30 வரை நீட்டிப்பு
- ஜி20 மாநாடு; பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி
- 1200 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி
- மணிப்பூரில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது தேசிய மக்கள் கட்சி
- வலுக்கும் நயன்தாரா – தனுஷ் ஆவணப்பட சர்ச்சை காட்சி;
- உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் நடந்த தீ விபத்து; இரட்டை குழந்தைகள் பரிதாப மரணம்
- வங்கதேச நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல் – சுகாதார நடவடிக்கையை தீவிரப்படுத்திய அரசு
Breaking News LIVE 18th NOV 2024: இன்று இரவு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று இரவு இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரைக்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Breaking News LIVE 18th NOV 2024: லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்களில் ரூ. 12 கோடி பறிமுதல்
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்பான இடங்களில் ரூ. 12.41 கோடி, அமலாக்கத் துறையால் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Breaking News LIVE: சென்னை - 8 சர்வதேச விமானங்கள் ரத்து - லிஸ்ட் இதோ - காரணம் என்ன?
சென்னையில் இன்று ஒரேநாளில் 8 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். முன்னறிவிப்பு இன்றி இன்று ஒரே நாளில் 8 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூர், இலங்கை, டாக்கா செல்லும் 4 விமானங்கள், மறு மார்க்கத்தில் சென்னை வரும் 4 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிர்வாக காரணங்களால் 8 சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Breaking News LIVE : உதகையில் வீடு கட்டித் தருவதாக மோசடி செய்தவர் கைது
உதகையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக கூறி ரூ. 1 கோடி மோசடி செய்த புகாரில் சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியாகநகரில் உள்ள சங்கரலிங்கம் என்பவரது கட்டுமான நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உதகையில் 8 மாதத்துக்குள் குடியிருப்பு கட்டித் தருவதாக கூறி விளம்பரம் வெளியிட்டுள்ளார் சங்கரலிங்கம். விளம்பரத்தை நம்பி இக்னேஸிஸ் தாமஸ் என்பவர் 6 பிளாட்டுகள் வாங்குவதற்கு ரூ.1.45 கோடியை தந்துள்ளார்.
8 மாதத்தில் குடியிருப்பு கட்டித் தராமலும் பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றியதாக சங்கரலிங்கம் மீது புகார் அளித்துள்ளார். இக்னோஸிஸ் தாமஸ் அளித்த புகாரின் பேரில் சங்கரலிங்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சென்னையில் உயிரிழப்பு - பெரும் அதிர்ச்சி
கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலிசா போட்டிக்காக குவாலியர் சென்று சென்னை திரும்பியபோது சென்னையில் உயிரிழந்தார். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.