Video : காட்டுத்தீயால் கீழிறங்கிய புள்ளிமான்.. பேருந்தில் மோதிய சிசிடிவி காட்சிகளால் அதிர்வலை..
உசிலம்பட்டி அருகே மலையில் ஏற்பட்ட தீயினால் தரைப் பகுதிக்கு வந்த புள்ளிமான் சாலையை கடக்க முயன்ற போது பேருந்து மோதி தூக்கி வீசும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வைத்த தீ மளமளவென பற்றி எரிந்து மலை முழுவதும் தீபற்றி எரிந்தது. இந்த தீயிலிருந்து தற்காத்து கொள்ள மலை அடிவாரத்திற்கு வந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று மலை அடிவாரத்தில் உள்ள ஏ.இராமநாதபுரம் கிராமத்தின் அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

#Abpnadu | மதுரை உசிலம்பட்டி அருகே மலையில் ஏற்பட்ட தீயினால் தரைப் பகுதிக்கு வந்த புள்ளி மான் சாலையை கடக்க முயன்ற போது பேருந்து மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.@SRajaJourno | @stalinABPtamil | @pkr_madras | @Srinietv2 | @sujinsamkovai pic.twitter.com/oqdYJGCTOd
— Arunchinna (@iamarunchinna) March 22, 2022

