மேலும் அறிய
Advertisement
ஆதிதிராவிட நலத்துறையை மாற்ற கோரிய வழக்கு - நேர்மறையாக சிந்திக்க மனுதாரருக்கு நீதிபதி அறிவுரை
’’ஆதிதிராவிட நலத்துறை, அமைச்சரவை பட்டியலில் 34ஆவதாக இடம் பெற்றிருப்பதால், அந்த சமூகத்தைச் சார்ந்த மக்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்’’
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேர்ந்த வெள்ளையன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகம் பல முதலமைச்சர்கள் கண்டுள்ளது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது ஆதிதிராவிடர் நலத்துறை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்கு வந்தபோது 1969 ஆம் ஆண்டு வரிசையில் 10 இடத்திற்கு சென்றது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7.21 கோடி பேரில் 21.11% ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மக்கள்.
1971ஆம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகம் வரிசை பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்தது. தற்போது ஆதிதிராவிட நலத்துறை 34 இடத்தில் உள்ளது. இதனால் பாகுபாடு காட்டப்படுவதாகவும், சரிசமமாக கையாளப்படவில்லை எனவும் தோன்றுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழக அமைச்சரவையின் பட்டியலில் ஆதிதிராவிடர் நல்ல துறையை 34-வது இடத்திலிருந்து அகற்றி, முன்வரிசைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "ஆதிதிராவிட நலத்துறை, அமைச்சரவை பட்டியலில் 34ஆவதாக இடம் பெற்றிருப்பதால், அந்த சமூகத்தைச் சார்ந்த மக்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
அதற்கு நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் அமைச்சரவை பட்டியல் வரிசைகள் மாற்றப்படுகின்றன. அகர வரிசை அடிப்படையில் பட்டியலிட்டால் ஆதிதிராவிட நலத்துறைத்தான் முதலாவதாக வரும். எவ்வித குறிப்புமின்றி அமைச்சரவை பட்டியலில் உள்ள முதல் எட்டு துறைகளை வரிசைப்படி தெரிவிக்க இயலுமா? என கேள்வி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் கூற இயலாததைத் தொடர்ந்து, வழக்கை தொடர்ந்த நீங்களே அந்த வரிசைகளை அறியாத போது, மக்கள் எந்த வரிசையில் வருகிறது என அறிந்து புண்பட வாய்ப்பில்லை. மனுதாரர் நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion