மேலும் அறிய
Advertisement
உசிலம்பட்டி: குப்பைகளை சேகரிக்கும் பணிகளை முறைப்படுத்தாத தனியார் நிறுவனத்தின் டெண்டர் ரத்து
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணிகளை முறைப்படுத்தாத தனியார் நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்து - நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் குப்பைகளை சேகரிக்க டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் டெண்டரை முறையாக குப்பைகளை சேகரிக்கவில்லை என குற்றம் சாட்டி உசிலம்பட்டி நகராட்சியில் டெண்டர் ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையாளர் காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், உசிலம்பட்டி நகர் பகுதியில் குப்பைகளை சேகரிக்க டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம் முறையாக குப்பைகளை சேகரிக்காததால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், பலமுறை முறையிட்டும் குப்பைகளை சேகரிக்கும் பணியை முறைப்படுத்தி குப்பைகளை சேகரிக்காமல் நகர் பகுதியை அசுத்தப்படுத்தும் நோக்கில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்தும் புதிய நிறுவனம் மூலம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#madurai | உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணிகளை முறைப்படுத்தாத தனியார் நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்து - நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.@usilaigeetha | @Ram89prabhakar | @Ns7Senthil143 | @geetharamki | @LPRABHAKARANPR3 | @abpmajhatv . pic.twitter.com/NqjACywYDv
— arunchinna (@arunreporter92) January 21, 2024
தமிழ்நாடு முழுவதும் குப்பைகளை சேகரிக்க டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் டெண்டரை முறையாக குப்பைகளை சேகரிக்கவில்லை என குற்றம் சாட்டி உசிலம்பட்டி நகராட்சியில் டெண்டரை ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உசிலம்பட்டி நகர் பகுதியில் தரை வாடகை கடைகளின் டெண்டர், நகர் பகுதியில் வந்து செல்லும் பேருந்துகளுக்கான வரி வசூல் டெண்டர் என அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்து புதிதாக டெண்டர் விடப்பட்டு நகராட்சிக்கு வருவாய்யை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மனமும். உசிலம்பட்டி நகர் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விவசாயிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உசிலம்பட்டி நகர் பகுதியில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும், பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஊராட்சி ஒன்றிய நிர்வாக இடங்களை நகராட்சி வசம் ஒப்படைக்க நீதிமன்றம் மூலமும், துறை ரீதியாகவும் முயற்சி எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தையும் இணைத்துக் கொள்ள நகர் மன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்த சூழலில் அனைத்து தீர்மானங்களையும் சேர்த்து சுமார் 29 தீர்மானங்கள் ஏகமனதாக நகர் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.,
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion