மேலும் அறிய
Advertisement
இந்தியா முழுக்க '501' கோயில்கள் : யாத்திரை அனுபவம் சொல்லும் சகோதரர்கள்.. !
8 விருதுகளுக்கு மேல் கிடைத்துவிட்டன. விரைவில் கின்னஸ் ரெக்கார்டிலும் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த வேலங்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டித்துரை துரைராஜ், கார்த்தி கேயன் துரைராஜ். மென்பொருள் பொறியாளர்களான இவர்களின் குடும்பம் பாரம்பரியமாக ஆன்மீக குடும்பத்தை சேர்ந்தது. ஆன்மீகத்தின் மீது கொண்ட வாஞ்சையால் இளைஞர்களிடமும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியா மற்றும் நேபாளம் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து சாதனை செய்துள்ளனர்.
இவர்களின் ஆன்மீகப் பயணம் நிறைவு பெற்று ஒன்றரை வருடத்தை கடந்த நிலையில் 8 சாதனை விருதுகள் கிடைத்துள்ளதாக இவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து கார்த்திகேயன் துரை ராஜ் நம்மிடம்...," கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வேலங்குடி சொற்கேட்ட விநாயகர் கோயிலில் கார் மூலம் ஆரம்பித்த பயணம் 20822 கிலோமீட்டர் பயணித்து 49வது நாளில் வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயிலில் நிறைவுபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் காவல்துறை எஸ்.பி ரோஹித்நாதன் ஆகியோர் தலைமையில் அந்த பயணம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த பயணம் நிறைவடைந்து ஒன்றரை வருடம் ஆன நிலையில் எங்களுக்கு 8 விருதுகளுக்கு மேல் கிடைத்துள்ளன. மறக்க முடியாத அந்த ஆன்மீக பயணத்தின் அனுபவங்களை தற்போது லாக் டவுன் சமயத்தில் விரிவாக எழுதி வருகிறேன். 20 மாநிலம், 3 யூனியன் பிரதேசங்கள் இந்தியா மற்றும் நேபாளம் என இரண்டு நாடுகளும் இதில் அடக்கம். மதுரை மீனாட்சியம்மன் கோயில், கேரளா பத்மநாமசாமி கோயில், ராஜஸ்தான் பிர்லா கோயில், பஞ்சாப் தங்க கோயில், குஜராத் துவாரகேஷ், பூரி ஜெகன்நாத் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களும் எங்களது பயணத்தில் அடக்கம். மொத்தம் 12 ஜோதி லிங்க கோயிலில் 10 கோயில்களை பார்த்துவிட்டோம்.
எங்களின் கார்பயணத்தில் திருச்சி, ஜோத்பூர், கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் மட்டும் தான் காரை மேஜர் சர்வீஸ் செய்தோம். மித்தபடி எங்குமே எந்த வேலையும் ஆகவில்லை. எந்த ஒரு சின்ன தடங்களும் இல்லாமல் கோயில்களுக்கு சென்று வந்தோம். மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் போது குதிரை சவாரி செய்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. எந்த ஒரு கோயிலிலும் சிறப்பு தரிசனமோ, வி.ஐ.பி டிக்கட்டோ பெறவில்லை. ஆனாலும் ஒவ்வொன்றும் முறையாகம் நல்ல தரிசனம் கிடைத்து. குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்ய சென்ற போது கடுமையான கூட்டம் அங்கு சாமியை தரிசிக்க முடியாதோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் திடீர் என்று கோயிலில் சாமியை உலா கொண்டுவந்தனர். அதனால் இன்ப அதிர்ச்சியடைந்து சாமியை தரிசனம் செய்தோம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கோயில் நடைதிறப்பு நேரம் மாறாக இருக்கும் என்பதால் காலை 4 மணிக்கே எழுந்துவிடுவோம். அதே போல் ஒவ்வொரு பகுதிக்குரிய உணவுகளை சுவைப்போம். ஆன்மீக பயணம் என்பதால் தொடர்ந்து சைவம்தான். ஒவ்வொரு இடத்திற்கு க்ளைமேட், தண்ணீர் என்று மாறுதல் இருந்தாலும் உடல் ரீதியா எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியா முழுதும் சாலைகள் பயணத்திற்கு நன்றாகவே இருந்தது. பீஹாரில் மட்டும் கொஞ்சம் கஷ்டம். மத்தபடி ஓகே தான்.
நார்த் ஈஸ்ட் பகுதியில் 300 கி.மீ ஒரு இடத்தில் தான் நல்ல டீ கடையை பார்க்க முடியும். அதனால் அப்பகுதியில் பயணிப்பது சற்று சவாலாகத்தான் இருந்தது. இப்படி பல்வேறு அனுபவத்துடன் தான் எங்கள் பயணம் முடிந்து. இப்போது ஒன்றரை வருடம் ஆகிவிட்டது என்று நினைத்தாலே ஆச்சரியமாக உள்ளது. எங்களுடைய ரெக்கார்டை நாங்களே முறியடிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. ஏன் என்றால் கால, நேர சூழல் அனைத்தும் ஒத்துப்போகுமா என்று தெரியவில்லை.
மேலும் ஒரு சகோதரர்களாக இந்த பயணத்தை நிறைவு செய்வதும் கடினம் என தோன்றுகின்றது. எங்குளடைய பயணத்தை கண்காணிக்க கேமரா மற்றும் ஜி.பி.எஸ் பிட் செய்திருந்தோம். ஒட்டுமொத்த பயணத்தில் மாதா வைஷ்ணவி தேவி கோயில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கின்னஸ் ரெக்கார்ட் முதல் பல்வேறு ரெக்கார்ட்ஸ்களூக்கு பதிந்துள்ளோம். தற்போது வரை ஏசியன் ரெக்கார்ட், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட், வேர்ல்ட் ரெக்கார்ட் இந்தியா உள்ளிட்ட 8 விருதுகளுக்கு மேல் கிடைத்துவிட்டன. விரைவில் கின்னஸ் ரெக்கார்டிலும் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion