மேலும் அறிய
Advertisement
எங்கும் மது எப்போதும் மது.. தமிழ்நாடு அரசை சாடிய அன்புமணி ராமதாஸ்
தி.மு.க., அரசு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என கூறி ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது பார்த்தால் எங்கும் மது எப்போதும் மது என்று நிலைக்கு வந்துள்ளது. - மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
சென்னையில் இருந்து திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார் பா.ம.க., கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ். இதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசுகையில்...," தென் மாவட்டங்களில் மிகப்பெரிய பிரச்னை தண்ணீர் பிரச்னை காவிரி குண்டாறு தொடர்பாக பா.ம.க., சார்பில் வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் காவிரி குண்டாறு இணைப்பிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு. அதற்கு 16 கோடி ரூபாய் செலவாகும்.
ஆனால் பேரளவுக்கு ஒரு அடிக்கல்நாட்டி பிறகு தி.மு.க., ஆட்சி காலத்தில் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மட்டும் காவேரி ஆற்றல் 620 டி.எம்.சி., நீர் கடலில் கலந்துள்ளது. காவிரி குண்டாறு கொண்டுவரப்பட்டிருந்தால் மதுரை., விருதுநகர். புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 30 முதல் 40 டி.எம்.சி., தண்ணீர் சேமித்திருக்கலாம் ஆனால் அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்கிறது.
மத்திய அரசு நிதி கொடுப்பதாக இல்லை. ஆனால் தமிழக அரசு நிதி கொடுக்காமல் இருப்பதால் திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்கக்கூடாது உடனடியாக தமிழக அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 40 ஆண்டு கால மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் முழுமையான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை அரசு தலையிட்டு உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில் முக்கியமான சட்ட மசோதா தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா., 2023 ஒரு தனியார் நிறுவனம் 100 ஏக்கருக்கு மேல் வைத்திருந்தால் அதில் வருகின்ற ஏரிகளோ குளங்களோ குட்டைகளோ ஆறுகளோ வந்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த கட்டுமானத்தை தொடங்கலாம். லட்சக்கணக்கான வீடுகளை இடித்துள்ளனர் முறையான பட்டாக்கள் வழங்காததால் இது இடிக்கப்பட்டது என்று கூறுகிறீர்கள்.
முறையான ஆதாரங்களை ஏதும் இல்லாமல் கம்மாய்களை ஆற்றங்கரையில் தனியாக நிறுவனங்கள் வாங்குகின்றனர். அதை நாங்கள் கட்டி விட்டோம்., இது எங்களுக்கு சொந்தம் என்று கூறுவார்கள். ஏழைகளுக்கு ஒரு சட்டம் பணக்கார நிறுவனங்களுக்கு ஒரு சட்டம் என தமிழக அரசு அந்த நிலையில் போகிறது.
தமிழக அரசு பணியாளர்கள் சாதகமாக செயல்பட்டு வருகிறது. இது மக்களின் ஆட்சியா.? தனியார் கம்பெனிகளின் ஆட்சியா.? என தெரியவில்லை. சட்டமன்ற கூட்டத்துடன் 100 நாட்கள் நடத்துவோம் என்றும் அது முற்றிலுமாக நேரடியாக ஒளிபரப்பாகும் என்று கூறினார்கள் அதில 48 நிமிடத்தில் ஒரு மானிய கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. நேரடியாக ஒளிபரப்பம் செய்யவில்லை என்றார். சமீபத்தில் திருமண மண்டபத்தில் விளையாட்டரங்கத்தில் பன்னாட்டு மாநாடுகளில் மது விற்கலாம் என்ற அரசாணையை யாருக்கும் தெரியாமல் பிறப்பித்துள்ளார்கள். இந்த அரசாணையை முற்றிலுமாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
ஆனால் இதை மறைமுகமாக அரசாணையை பிறப்பித்து இருக்கிறார்கள். திமுக எண்ணம் நல்ல எண்ணம் இல்லை என்பதற்கு இதிலிருந்து தெரிகிறது. பன்னாட்டு மாநாடுகள் நடத்தும்போது மதுக்கூடங்களை நடத்தலாம் என்று கூறுவது எந்த வித நியாயம் என்று தெரியவில்லை பொதுவாக திமுக அரசு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என கூறி ஆட்சிக்கு வந்தார்கள்.
இப்போது பார்த்தால் எங்கும் மது எப்போதும் மது என்று நிலைக்கு வந்துள்ளது. முதலமைச்சர் அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கில் கையெழுத்திடுவோம் என கூறினார்.? இன்றைய நிலை உங்களுடைய நிறுவனர் அண்ணா அவர்களின் கொள்கையை ஏன் பின்பற்றவில்லை.? அண்ணா அவர்கள் கொள்கை பூரண மதுவிலக்கு என்ற ஒரு சட்டத்தை போட்டு சாராயம் விற்கக் கூடாது என்பது தான்.!
ஆனால்., இன்றைக்கு உங்களுடைய அமைச்சர் அவர்கள் 45 ஆயிரம்கோடிக்கு சாராயம் விற்றுஉள்ளது என பெருமையாக கூறுகிறார். இதுவா தமிழ்நாட்டின் வளர்ச்சி இது என்ன பொறுத்த வரைக்கும் இது ஒரு சாபகெடு வெக்கக்கேடு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பார் சேப்பாக்கத்தில் உள்ளது., 45 ஆயிரம் பேர் போய் கூடி குடிக்க போகிறார்கள். தமிழகத்தின் அரசாணை அப்படித்தான் இருக்கிறது., குடிக்காமல் கிரிக்கெட் பார்க்க மாட்டீர்களா..? குடிக்காமல் மாநாடு நடத்த மாட்டீர்களா..? இதுக்கு முன்னால் நடந்த விளையாட்டு போட்டிகளில் குடித்துவிட்டு தான் நடத்தினார்கள்களா..?? ஏதோ ஒரு தனியார் நிறுவனங்களுக்காக அவர்களின் வருமானடத்தை நீட்டுவதற்காக சட்டத்தை மாற்றி திருத்தி., கோவில் பக்கத்திலேயே கல்லூரி பக்கத்துலையோ மது கடைகள் இருக்க கூடாது என்ற சட்டம் இருக்கிறது.
அதற்கு நேர் எதிராக நீங்கள் கல்யாண வீடுகளில் மதுக்கள் வைக்கலாம் என்று கூறி வருகிறீர்கள். கோவிலில் கல்யாண மண்டபம் இருக்கிறது அங்கே எல்லாம் அனுமதி கொடுக்க போறீர்களா.? மக்கள் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள் இது மக்களுக்கு எதிரான முடிவு., இந்த முடிவை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும். வேறு ஒரு தனியார் நிறுவனங்களுக்காக ஏதோ சட்ட மசோதாவை செயல்படுத்திக் கொண்டிருக்க தோற்றம் இருக்கிறது.
மல்டிநேஷனல் கம்பெனிகாக இந்த 12 மணி நேரம் முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் இது முற்றிலும் தவறான முடிவு. 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் வேலை என்றால் குறைந்தது அவர்கள் 10 மணி நேரம்வது தூங்க வேண்டும். 12 மணி நேர வேலை மசோதா சட்டத்தை நிறுத்த வைத்திருக்கிறார்கள் தவிர முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை ஆளுநருக்கு அனுப்பாமல் இருக்கிறார்கள். எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதை உடனடியாக தமிழக அரசு சரி செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் இது மிகப்பெரிய அதிர்ச்சி. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திய அதற்கான அவரை கொலை செய்திருக்கிறார்கள் மாஃபியா கும்பல் இது போன்ற பல மாஃபியா கும்பல் இயங்கி கொண்டிருக்கின்றன. இதை முதலமைச்சர் அவர்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் இதை ஒழிக்க வேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களே குண்டர் சட்டத்தில் அடைக்க பட வேண்டும். விஏஓ மரணத்தை சாதனமாக விடக்கூடாது. நமக்கு தெரிந்து இந்த மாதிரி நடந்திருக்கிறது நமக்கு தெரியாமல் எவ்வளவு நடந்து இருக்கும். வட மாநிலங்களைப் போல் நமது நாட்டில் நடக்கக்கூடாது . உடனடியாக மணல் சுரங்கங்கள் அனைத்தையும் அரசாங்கம் தலையிட்டு முட வேண்டும். நமக்கு இயற்கை வளம் வேண்டும்.
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜனின் சர்ச்சை ஆடியோ என சொல்லப்படும் ஆடியோ குறித்த கேள்விக்கு..
”பி.டி.ஆர் அவர்கள் அந்த ஆடியோ சர்ச்சை பதிவை பேசினாரா என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் அவர் குரல் தானா என்று பார்க்க வேண்டும் அது அவர் என்னுடைய குரல் இல்லை என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் பேசவில்லை என்றால் இந்த ஆடியோ பதிவு பொய்யானது என்றால் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி இவர் தான் பேசியிருந்தால் என்று தெரிந்தால் இதற்கு அவர் உரிய விளக்கம் அவர் அளிக்க வேண்டும்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion