மேலும் அறிய

ஒரு புறம் மது ஒழிப்பு; மறுபுறம் மது ஆலை ஓனர்களுக்கு தேர்தலில் பிரச்சாரம் - திருமாவை சாடிய அன்புமணி

ஒருபுறம் திருமாவளவன் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிறார் மறுபுறம் மது ஆலையின் உரிமையாளர்களுக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார்.

மது ஒழிப்பில் பாமக Phd முடித்துள்ளது, திருமாவளவன் தற்போது தான் LKG வந்துள்ளார். அமைச்சரவையில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பதிவிட்டது மிகவும் சரியானது ஆனால் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு. திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தட்டும் அதே நேரத்தில் எங்கள் கட்சியை பற்றி அவதூறு பேசக்கூடாது. மது ஒழிக்கப்பட வேண்டும் என சொல்லும் திருமாவளவன் மதுபானம் உற்பத்தி செய்யும் முதலாளிகளான T.R.பாலுவுக்கும்,ஜெகத்ரட்சகனுக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்தது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பினார்.


ஒரு புறம் மது ஒழிப்பு; மறுபுறம் மது ஆலை ஓனர்களுக்கு தேர்தலில் பிரச்சாரம் - திருமாவை சாடிய அன்புமணி

மதுரையில் அன்புமணி பேட்டியின்போது பேசுகயில்,

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் காவல்துறை எதற்காக உள்ளது. முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வரும் இடம் சென்னை தான். தமிழகத்திற்கு வரும் பறவைகளில் மூன்றில் ஒரு பங்கு சென்னையில் தான் வருகின்றன. அந்த இடத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தளம் கொண்டு வருவதனால் பறவைகள் பாதிக்கப்படும். திருமாவளவன் பாமகவை ஜாதி கட்சி என்கிறாரே என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம் என அன்புமணி கேள்வி எழுப்பினார். பாமக சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி; அருந்ததியர்கள் இஸ்லாமியர்கள் மிகவும் பிற்படுத்த பட்ட சமூகம் என 6 இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக எனவும் சுற்றுச்சூழலுக்காகவும் நீர் நிலைகளுக்காகவும் கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் மது ஒழிப்புக்காகவும் நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பாமக.


ஒரு புறம் மது ஒழிப்பு; மறுபுறம் மது ஆலை ஓனர்களுக்கு தேர்தலில் பிரச்சாரம் - திருமாவை சாடிய அன்புமணி

இப்படி எல்லாம் எத்தனையோ பல சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து எழுவு செய்து வருகிறார் அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் அதேபோல விசிகவை பற்றி தரகுறைவாக எங்களாலும் பேச முடியும். நீங்கள் மாநாடு நடத்தினால் நடத்திக் கொள்ளுங்கள். மது ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம்,மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்.எனவே அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும் அடைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். ஏனென்றால் இது எங்களின் கட்சியின் அடிப்படை கொள்கை. மது ஒழிப்பில் பாமக பிஎச்டி படித்துள்ளது திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார்.திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார் ஆனால் எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக இருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர்.


ஒரு புறம் மது ஒழிப்பு; மறுபுறம் மது ஆலை ஓனர்களுக்கு தேர்தலில் பிரச்சாரம் - திருமாவை சாடிய அன்புமணி

மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பாமகவை சேர்ந்த 15000 பெண்கள் சிறைக்கு சென்று இருக்கிறார்கள். பாமக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும் இந்திய அளவில் 90 ஆயிரம் மது கடைகளையும் மூடி உள்ளோம்.தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பாமக தான் முயற்சி மேற்கொண்டது. திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும் அவர்தான் மது ஒழிப்பிற்கு எதிராக பேசுகிறார். மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கி அவரை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.நிர்மலா சீதாராமன் கோவையில் நல்ல எண்ணத்தில் தான் கூட்டத்தை நடத்தினார்.

தொழில் அதிபர்களின் பிரச்சனை என்ன என்பதை கண்டறிவதற்காக தான் அவர் கோவை வந்தார் ஆனால் அதில் சில சர்ச்சைகள் எழுந்துள்ளது அது தவிர்த்துக்கப்பட வேண்டியது. அமைச்சரவையில் பங்கு என்ற திருமாவளவனின் வீடியோ பதிவு மிகவும் சரியானது அதே நேரத்தில் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு. அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் தங்களுடைய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள் எனவே திருமாவளவனின் கருத்தில் தவறு இல்லை. ஒருபுறம் திருமாவளவன் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிறார் மறுபுறம் மது ஆலையின் உரிமையாளர்களுக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார். மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எதற்காக மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான T.R.பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு சென்று வாக்கு கேட்டீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். 

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget