Alanganallur Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ஆம் தேதி நடைபெறும்.. மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.. முழு விவரம்..
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ம் தேதி நடைபெறும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த நிலையில், நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்றும், போட்டிகள் ஜனவரி 16-ந் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக காளைகளும், காளைகளை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்களும் தீவிரமாக தயாராகி வந்தனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் 16-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜனவரி 14 ல் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, ஜனவரி 15 ல் நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தான் தற்போது பிரச்சனை பிறந்துள்ளது. ஜனவரி 16 ல் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, முழு ஊரடங்கு அமலில் இருக்கும் ஞாயிற்று கிழமை வந்ததால் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ம் தேதி நடைபெறும் என பேட்டியளித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாடு மதுரையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு நடக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, போட்டி நடைபெறுவதற்கான கட்டுபாடுகளும் விதித்தது. அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் காளையர்கள் மற்ற இரண்டு இடங்களில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க இயலாது, பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் காளையர்களுக்கு மற்ற இரண்டு போட்டியில் பங்கேற்க இயலாது, அதே போல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் காளையர்களுக்கு மற்ற இரண்ட போட்டியில் பங்கேற்க இயலாது, போன்ற கொரோனா கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
மேலும், அங்கு வரும் மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், காளையுடன் வரும் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்து இருக்க வேண்டும். வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்த பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்