மதுரை: ஜிம்மில் அதிக பளு தூக்கிய பட்டதாரி இளைஞர்: மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.!
மதுரை பழங்கா நத்தம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஜிம்மில் அதிக பளு தூக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்கா நத்தம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஜிம்மில் அதிக பளு தூக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு இவருக்கு வயது இருபத்தி ஏழு. இவர் பட்டப்படிப்பு முடித்த நிலையில் வேலைக்காக காத்திருந்தார். தினமும் வீட்டின் அருகே இருக்கக்கூடிய ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கு சென்று வந்த இவர் நேற்று உடற்பயிற்சிக்கு சென்றபோது அதிக எடை கொண்ட பயிற்சியை மேற்கொண்டு உள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட சக நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எஸ் எஸ் காலனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக பளு தூக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
KG Admission: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட தமிழக அரசு உத்தரவு
Breaking News Tamil LIVE: சிதம்பரம் கோயில் கணக்கு விவரங்களை கொடுக்க தீட்சிதர்கள் மறுப்பு
உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்தவர் குறித்து பயிற்சியாளர் பத்மநாபன் கூறுகையில் ”இன்றைய கால நிலையில் இளைஞர்கள் உணவு பழக்கங்கள் சரியில்லாத நிலை உள்ளது. உடற்பயிற்சி செய்பவர்கள் உடனடியாக தனது உடல் நிலை மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்று ஸ்டீராய்டு போன்ற தேவையற்ற உடலுக்கு தீங்கானவைகளை எடுத்துக்கொள்வதாகவும் இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வருவதாகவும், அதே போலதான் இந்த மாரடைப்பும் வருவதும் இன்றைய நிலையில் எதார்த்தமாகி விட்டது. உடற்பயிற்சி செய்வதே நல்ல ஆரோக்கியமான உடல் இருக்க வேண்டுவதற்கே. ஆனால் இன்று உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வரும் என்ற ஒரு தகவல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதலால் நல்ல உடல் நலம் கிடைக்க வேண்டுமென்றால் செயற்கையான உணவை தவிர்த்து இயற்கையான உணவு வகைகளை சாப்பிட வேண்டும்” என்றார்.
#மதுரையில் பட்டதாரி இளைஞர் ஜிம்மில் அதிக பளு தூக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.!! pic.twitter.com/uQJWb8w9Ek
— Nagaraj (@CenalTamil) June 7, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்