மேலும் அறிய

Tamil Nadu Election 2026: திண்டுக்கல் 7 சட்டமன்ற தொகுதிகளில் 86.35% வாக்குப்பதிவு – அமைதியாக நிறைவு பெற்ற தேர்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் 83.94% பழனி 83.58% ,ஒட்டன்சத்திரம் 88.63%,வேடசந்தூர் 88.86% ,நிலக்கோட்டை 85.43%, ஆத்தூர் 86.08%, நத்தம் 87.89% சதவீதபதிவாகியுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில்  திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன இந்த ஏழு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி ஆறு மணிக்கு நிறைவடைந்தது. இதில் திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி,  திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓம்.எம்.ஆர் பட்டி, கோவிந்தாபுரம், சோலைஹால் தெரு ஆகிய 3 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.


Tamil Nadu Election 2026: திண்டுக்கல் 7 சட்டமன்ற தொகுதிகளில் 86.35% வாக்குப்பதிவு – அமைதியாக நிறைவு பெற்ற தேர்தல்

இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் 83.94% பழனி 83.58,% ஒட்டன்சத்திரம் 88.63%,வேடசந்தூர் 88.86% நிலக்கோட்டை 85.43%,ஆத்தூர் 86.08%,நத்தம் 87.89% சதவீதபதிவாகியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் பதிவாகியுள்ளது.  இதற்கிடையே திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இரண்டு நபர்களின் வாக்குகளை வேறு நபர்கள் போட்டு விட்டதாக கூறி தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் டெண்டர் ஓட்டு மூலம் அவர்களை சமரசம் செய்தனர்.ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட வீரக்கல் பகுதியில் முன்விரோதம் காரணமாக திமுகவினை சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து மாலை ஏழு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்து மூடினர்.


Tamil Nadu Election 2026: திண்டுக்கல் 7 சட்டமன்ற தொகுதிகளில் 86.35% வாக்குப்பதிவு – அமைதியாக நிறைவு பெற்ற தேர்தல்

தொடர்ந்து வாக்குப்பட்டி இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேன்கள் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பழனி சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இந்த வளாகத்தை24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதேபோல வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில்  உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் பெரிய அளவிலா அசம்பாவிதங்கள் இன்றி  தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget