மேலும் அறிய

Sivagangai : சிவகங்கையில் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு..!

400 ஆண்டுகள் பழமையான கோவில் மறு கட்டமைப்பு குறித்த கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் நகரம்பட்டியில் இடிந்து சிதலமடைந்துள்ள சிவன் கோவில்  சுவரில் எழுத்துகள்  இருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தொல்நடைக் குழுத் தலைவர் நா.சுந்தரராஜன், உறுப்பினர் கா.சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
 
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா தெரிவித்ததாவது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் பாகனேரியை அடுத்த நகரம்பட்டியில் 400 ஆண்டுகள் பழமையான கோயில், மறு கட்டமைப்பு கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

Sivagangai : சிவகங்கையில் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு..!
 
 மேலே திருத்தியூர் முட்டத்து பாகனேரி
 
 பாகனேரி பழமையான கல்வெட்டில் மேலே திருத்தியூர் முட்டத்து பாகனேரி என வழங்கப்படுகிறது, மேலும் இப்பகுதியை மருதுபாண்டியர்கள் வாழ்ந்த 17ஆம் நூற்றாண்டில் வாளுக்கு வேலி என்னும் படை தளபதியாக வாழ்ந்த செய்தியை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. பாகனேரி நாட்டில் ஆறு முதன்மையான ஊரில் ஒன்றாக நகரத்தார் வாழ்ந்த ஊராதலால் நகரம்பட்டி எனவும் இன்றைய நகரம்பட்டி வழங்கப்படுகிறது.

Sivagangai : சிவகங்கையில் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு..!
 நகரம்பட்டி அகத்திசுவரமுடையார் கோயில்
 
 நகரம்பட்டி ஊருக்கு வெளியே கதவங்குடி கண்மாய்ப் பகுதியில் பெரிதும் சிதலமடைந்த பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. அதில் ஒரு பக்க பக்கவாட்டுச் சுவர் இடிந்த நிலையில் மற்றொரு பக்க பக்கவாட்டு சுவரில் நான்கு கற்களில் தொடர்ச்சியான கல்வெட்டு காணப்படுகிறது.

Sivagangai : சிவகங்கையில் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு..!
 
 கல்வெட்டு
 
 கல்வெட்டு உள்ள எழுத்துக்களை கொண்டு 15 ,16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. கல்வெட்டு உள்ள கற்கள் ஆங்காங்கே பொடிந்து குழி விழுந்து எழுத்துகள் முழுவதுமாக தெரியவில்லை. ஆனாலும் தெரியும் இடத்தில் வாசிக்க முடிகிறது, எழுத்துகள் முழுமையாக இல்லாததால் பொருள் புரிவதில் சிரமம் உள்ளது. 

Sivagangai : சிவகங்கையில் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு..!
கல்வெட்டுச் செய்தி
 
 ஆண்டு குறிப்பிட்டு இருக்கும் பகுதி சிதைவுற்று இருப்பதால் புரிந்து கொள்ள முடியவில்லை. கதவங்குடி வாக்கிய நல்லூர் நாயனார் அகத்தீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில் அதிட்டானாம், உபானம் கட்டுவதாக சொன்ன வண்ணஞ் செய்தார், சொன்ன வண்ணம் செய்தார் என்ற சொற்கள் மூன்று முறை அடுக்கி வருகிறது ஓரிடத்தில் உடையார் சூரிய தேவர் சொன்ன வண்ணம் செய்தார் என வருவதால் உடையார் சூரிய தேவர் என்பவர் இப்பகுதியின் ஆட்சியாளராகவோ அல்லது அரசு அலுவலராகவோ இருந்திருக்கலாம் மேலும் இக்கோவில் நாயனார் அகத்தீஸ்வரமுடையார் என்றும் தேவி திருக்காம கோட்டத்து நாச்சியார் என்றும் அறிய முடிகிறது.
 
வேங்கை, மாணிக்கவல்லி போன்ற கண்மாய் வயல் பகுதி கல்வெட்டுகளில் வருகிறது,அமுதுபடி சாத்து உள்ளிட்ட நித்திய நியமத்திற்கு இப்பகுதிகள் வழங்கப்பட்டிருக்கலாம். மேலும் பழந்தேவர் என்னும் சொல்லால் இக்கோவிலில் பழம் கோயிலாக இருந்து மறு கட்டமைப்பு புனரமைப்பு செய்யப்பட்டிருப்பதையும் இந்நிலம் கோவில் பண்டாரத்தில் எனும் சொற்கள்.
 
இரு இடங்களில் வருவதால் நிரந்தர கருவூலம் அமைக்கப்பெற்று கோவில் காக்கப்பட்ட செய்தியையும் அறிய முடிகிறது. பெரிதும் சிதைவுற்ற நிலையில் உள்ள இக்கோவில் தற்போதும் மக்களால் வழிபாட்டில் உள்ளது.  கோவில் தொடர்பான விவரங்களை அறிய இவ்வூரைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் முத்தையா மற்றும் இந்திய கப்பல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கக் கூடிய சுப்பிரமணிய பாரதி, மேலும் பாலசுப்பிரமணி ஆகியோரிடம்  கேட்டபோது பழமை மாறாமல் இக்கோவிலை புனரமைத்து பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 400 ஆண்டுகள் பழமையான கோவில் மறு கட்டமைப்பு குறித்த கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தலைப்பு செய்திகள்

பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget