கேரளாவை உலுக்கிய சம்பவம்... சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 35 வயது பெண் - சிக்கியது எப்படி?
அந்த பெண் தன் வீட்டுக்கு வரும் போது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், சம்பவத்தன்று எர்ணாகுளத்திற்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும் தெரியவந்தது.
பாலியல் தொல்லை, பாலியல் வன்புணர்வு போன்ற கொடூர சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடைமுறைகளும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளுக்கு எதிரான விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. பாலியல் புகார்களுக்கான போக்சோ சட்டமும் நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் பள்ளிகளில், பொது வெளியில் செல்லும் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் கொடூர சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகிறது. பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை போன்ற புகர்களில் ஆண்கள் மட்டும் சிக்குவதில்லை இதற்கு மத்தியில், கேரளாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 35 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மகனின் நண்பன் என்பதால் அடிக்கடி வீட்டுக்கு வந்த சிறுவனிடம் தகாத செயலில் ஈடுபட்டதாக பெண் கைதாகியுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள 35 வயது பெண் ஒருவர் கணவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் மகன் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 14 வயது சிறுவனும் அதே பள்ளியில் படித்து வருகிறார். சிறுவர்கள் இருவரும் பள்ளிக்கு செல்லும் போதும், வரும்போதும் ஒன்றாக தான் வருவார்கள். நண்பர்களாக இருவரும் பழகி வந்ததுள்ளனர். மேலும் பக்கத்து வீடு என்பதால் இருவீட்டினரும் நல்ல பழக்கவழக்கத்தில் இருந்து வந்துள்ளனர். அதேபோன்று சிறுவர்களும் இருவர் வீட்டிலும் மாறி மாறி விளையாடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளனர். அப்படி பக்கத்துவீட்டு 14 வயது சிறுவன், 35 வயது பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி விளையாடுவதற்கு சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் மீது மோகம் கொண்ட அப்பெண் பாலியல் இச்சையில் அந்த சிறுவனுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுவன் நேற்று தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வீட்டில் இருந்து சென்றிருக்கிறான். ஆனால் பள்ளிக்கு சிறுவன் வரவில்லை என்று பெற்றோருக்கு ஆசிரியர் தரப்பில் இருந்து தகவல் சென்றுள்ளது. இதனால் அந்த சிறுவனின் பெற்றோர் பள்ளி மற்றும் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுவனை காணவில்லை என்பதாலும் பக்கத்து வீட்டிற்கும் சென்று தேடியுள்ளனர். ஆனால் அங்கும் சிறுவன் இல்லாத நிலையில், மேலும் அந்த பெண்ணையும் காணவில்லை. அவரை தொடர்புகொள்ள முயன்றபோது முடியவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர் போலீசார்.
விசாரணையில், பக்கத்து வீட்டு பெண் தான் அந்த சிறுவனை எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுவனை மீட்டனர். மேலும் சிறுவனை கடத்தி சென்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாக 35 வயது பெண்ணை பாலக்காடுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் அந்த பெண் தன் வீட்டுக்கு வரும் போது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், சம்பவத்தன்று எர்ணாகுளத்திற்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்கில் பெண்ணை கைது செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

