மதுரை: சுற்றுலா வாகனம் லாரி மீது மோதி விபத்து.. இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு..
சுற்றுலா வந்த இடத்தில் வாகனம் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற சுற்றுலா வாகனம் ஒன்று மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒத்தக்கடை அருகே வந்தபோது நின்று கொண்டிருந்த தண்ணி லாரியின் பின்பக்கம் மோதியதில் சம்பவ இடத்திலே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர் மற்றும் ஓட்டுநர் பிரபு இருவரும் உயிரிழந்தனர்.
#மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஒத்தக்கடை அருகே சுற்றுலா வாகனம், லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி, பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.#madurai | #ACCIDENT | @UpdatesMadurai | #travel pic.twitter.com/oIQsFKeGwZ
— Arunchinna (@iamarunchinna) August 4, 2022

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

