மேலும் அறிய
Advertisement
பழனி முருகன் கோயிலில் 2.36 கோடி உண்டியல் காணிக்கை - உண்டியல் எண்ணும் போது பணம் திருடிய கல்லூரி பணியாளர் கைது
’’12.36 கோடி ரொக்கம், 784 கிராம் தங்கம், 12.857 கிலோ வெள்ளி ஆகியவை உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது’’
அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான முருகபெருமானின் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இவ்வாறு பழனிக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 22ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதை தொடர்ந்து கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் ஒரு மாத உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 36 லட்சத்து 14 ஆயிரத்து 65 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 59 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் உண்டியலில் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 764 கிராம், வெள்ளி 12.857 கிலோ காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
மேலும் குறிப்பாக உண்டியல் என்னும் பணியின் போது பணியில் உள்ள பழனியாண்டவர் கலைக்கல்லூரி மாணவர்கள், பணியாளர்களும் ஈடுபட்டு இருந்த நிலையில் இதில் கல்லூரி தற்காலிக பணியாளர் ராமகிருஷ்ணன் (38) என்பவர் காணிக்கை எண்ணும்போது 10,700 ரூபாயை திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்ட நிலையில் அதை தெரிந்துகொண்ட அதிகாரிகள் அவரை பிடித்து பணத்தை கைப்பற்றினர். பின்னர் அவரை பழனி அடிவாரம் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவரே பணம் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
மதுரை
தமிழ்நாடு
கால்பந்து
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion