காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன? முழு விபரம்
Chennai weather report today: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வானிலை நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றைவிட இன்று வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம் எப்படி உள்ளது ?
கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் ( kanchipuram weather report) , செங்கல்பட்டு ( Chengalpattu weather report ) மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் தெளிவாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இன்று ( June 18 ) எதிர்பார்க்கப்படும் வானிலை ?
இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகும் காற்றின் அதிகபட்ச ஈரப்பதம் 60 சதவீதமாகவும் மற்றும் காற்றின் குறைந்தபட்ச ஈரப்பதம் 30 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. சராசரி காற்றின் வேகம் 16 கிலோமீட்டர் ஆகும் தெற்கு தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை வானிலை முன்னறிவிப்பு
இன்று அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகும். காற்றின் அதிகபட்ச ஈரப்பதம் 70 சதவீதமாகவும் மற்றும் காற்றின் குறைந்தபட்ச ஈரப்பதம் 40 மேற்கு மற்றும் தென்மேற்கு இருக்க வாய்ப்புள்ளது. சராசரி காற்றின் வேகம் 22 கிலோமீட்டர் ஆகும். தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் ,பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் நிமிடம் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது