காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசு...எத்தனை பேருக்கு தெரியுமா..?
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் வழங்கும் விழா திருப்பெரும்புதூர் வட்டாரம், மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மணிமங்கலம் நியாய விலைக்கடையின் நடைபெற்றது. இவ்விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி , தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பங்கேற்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 634 நியாயவிலைக் கடைகளுடன் இணைந்த பொங்கல் பரிசு பெற தகுதிவாய்ந்த 3,96,752 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கப்பணம் வழங்குவதற்கு தமிழக அரசால் ரூ.43.99 கோடி ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் |
அளவு |
மதிப்பு (ரூ.கோடியில்) |
||
பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை |
3,96,752 |
|||
குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி வீதம் |
397 மெட்ரிக் டன் |
ரூ. |
1.40 |
கோடி |
ஒரு கிலோ சர்க்கரை வீதம் |
397மெட்ரிக் டன் |
ரூ. |
1.60 |
கோடி |
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு முழு கரும்பு வீதம் |
3,96,752 முழு கரும்புகள் |
ரூ. |
1.31 |
கோடி |
ரொக்கம் ரூ.1000/- வீதம் |
3,96,752 எண்ணிக்கை |
ரூ. |
39.68 |
கோடி |
மொத்தம் |
43.99 |
கோடி |
மேலும், தமிழ்நாடு அளவில் அனைத்து அரிசி பொறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூ.2429.05 கோடி வழங்கி தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் |
அளவு |
மதிப்பு (ரூ.கோடியில்) |
||
பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை |
1,86,41,423 |
|||
குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி வீதம் |
18,641 மெட்ரிக் டன் |
ரூ. |
65.62 |
கோடி |
ஒரு கிலோ சர்க்கரை வீதம் |
18,641 மெட்ரிக் டன் |
ரூ. |
75.71 |
கோடி |
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு முழு கரும்பு வீதம் |
1,86,41,423 கரும்புகள் |
ரூ. |
61.52 |
கோடி |
ரொக்கம் ரூ.1000/- வீதம் |
1,86,41,423 எண்ணிக்கை |
ரூ. |
1864.14 |
கோடி |
மொத்தம் |
ரூ. |
2066.99 |
கோடி |
இவ்விழாவில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர், டி.ஆர்.பாலு, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடையிலும் இன்று காலை முதல் பொங்கல் பரிசை பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்ற வருகின்றனர்.