(Source: ECI/ABP News/ABP Majha)
Kanchipuram Powe Cut: காஞ்சிபுரத்தில் நாளை எங்கெல்லாம் மின்வெட்டு? இதோ முழு தகவல்கள்
kanchipuram power shutdown: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்சாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவமழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
மின்தடை:
அதுபோன்ற சமயங்களிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாகவும் பணிகள் முடிக்கப்பட்டு மின்சாரம் தரப்படும். அந்த வகையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் நீர்வள்ளுர் 110/33-11 கே.வி துணை மின் நிலையம் மற்றும் பரந்தூர் 33/11 கே.வி துணை மின் நிலையங்களில் 27.12.2023 அன்று புதன் கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து திருப்பெரும்புதூர் 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
நீர்வள்ளுர் துணை மின் நிலையம் மின் சாதன பராமரிப்பு பணிகள் முன்னிட்டு மின் விநியோகம் தடை.
நீர்வள்ளுர் 110/33-11 கே.வி துணை மின் நிலையம் மற்றும் பரந்தூர் 33/11 கே.வி துணை மின் நிலையங்களில் 27.12.2023 அன்று புதன் கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் நீர்வள்ளுர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளுர், தொடுர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் ஆகிய கிராமங்களிலும், பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் காரை, சிறுவாக்கம், ஆண்டிசிறுவள்ளுர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன் கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய் மற்றும் மேல்படுவூர் ஆகிய கிராமங்களிலும் 27.12.2023 அன்று புதன் கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும்.
அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.