காஞ்சிபுரத்தில் களைகட்டிய பொங்கல் விழா.! கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மக்கள் வெள்ளம்..!
காந்தி சாலையில் பேருந்து,கார்,ஆட்டோ உள்ளிட்டை செல்லாமல் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்திட எதிர்பார்ப்பு
பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் இந்த ’பொங்கல்’ பண்டிகை உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது.
அரைகோளத்தின் தெற்குப் புள்ளியில் சூரியன் அஸ்தமித்து, வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஜனவரி 15 அன்று தொடங்கி ஜனவரி 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?
தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சனைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும் புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர்.
புராணங்களின்படி, அனைத்து தேவர்களுக்கும் ராஜாவாகிறார் இந்திரன். இதனால், அவர் அதிக கர்வம் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர், பசு மேய்பவர்கள் அனைவரையும் இந்திரனை வணங்க வேண்டாம் என்றும், நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால், கோபம் கொண்ட இந்திரன் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்த பேரழிவு ஏற்படுத்த மேகங்களை அனுப்பியுள்ளார். தையறிந்த பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, மக்கள் மற்றும் அனைத்து கால்நடைகளையும் பாதுகாக்க செய்து, இந்திரனுக்கு அருள் புரிகிறார். இதனால், இந்திரனின் கோபம் உடைந்து, கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார். இதையே கொண்டாடும் நிகழ்வாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.