(Source: ECI/ABP News/ABP Majha)
Diwali: பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்.. மார்க்கெட்டுக்கு வந்த புதிய பட்டாசுகள்
காஞ்சிபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் ஏராளமான பொதுமக்கள் பட்டாசு கடை வாங்க குவிந்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு நிகராக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தீபாவளி நன்னாளில் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிப்பது வழக்கமான உள்ளது
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் செல்லத் தொடங்கியுள்ளனர். வெளியூர் செல்லும் பயணிகளுக்காக நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.
மந்தமாக இருந்த விற்பனை
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மாத கடைசியில் வருவதால் கடந்த ஒரு வார காலமாக பெரிய அளவில் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் அவதி அடைந்து வந்ததனர். குறிப்பாக பட்டாசு மற்றும் துணி கடைகளில் வியாபாரங்கள் இல்லாமல் வியாபாரிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
நேற்று முதல் தொடங்கிய வியாபாரம்
தீபாவளிக்காக பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் தி.நகர் ரங்கநாதன் வீதியில் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்து வருகின்றனர். தி.நகர் மட்டுமின்றி வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் மற்ற பகுதிகளிலும் கடைகளில் மக்கள் புது ஆடைகள் வாங்க குவிந்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் நிலை என்ன ?
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிறிய வகை பலசரக்கு மளிகை கடைக்காரர்கள் மற்றும் பெட்டி கடைக்காரர்கள் சில்லறை விற்பனைக்காகவும், தீபாவளி பண்ட் நடத்துவோரும் தங்களுக்கு தேவையான கிப்ட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளில் தீபாவளி பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் உள்ள பட்டாசு கடையில், சிவகாசியில் இருந்து புதிய ரக பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டதால் அதனை வாங்க குவிந்துள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள்.
புதிய ரக பட்டாசுகள்
நடப்பு ஆண்டு புதுவராக, பாப்கார்ன் பவுண்டைன் பூத்தொட்டி, கோல்டு கலரில் வெடித்து ஒளிரும் 'டாலர் வீல்' சக்கரம், சில்வர் கலரில் ஒளிரும் போக்கர் சக்கரம், சங்கு சக்கரம் சுற்றியபின் ராக்கெட்போல சென்று வெடிக்கும் பிரிஸ்டல், மார்க் 1 எனப்படும் ராக்கெட் உள்ளிட்ட பல வகையான பட்டாசுகள் நடப்பு ஆண்டு புது வரவுகளாகவந்துள்ளன.இதனை பொதுமக்கள் ஏராளமான குவிந்து தீபாவளி கொண்டாட வாங்கி செல்கின்றனர்.
துணிக்கடைகளில் குவியும் மக்கள்
இதேபோன்று காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள துணிக்கடைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதலே துணிகளை வாங்கி வருகின்றனர். இந்த ஆண்டு தாமதமாக வியாபாரம் தொடங்கினாலும், நல்ல வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.